இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். – யோவான் 11:43-44
நாம் ஆராதிக்கும் தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன் அவரால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றும் இல்லை. இதை நீங்கள் விசுவாசிக்கிறீகளா? நீங்கள் விசுவாசித்தால் இன்று ஓர் அற்புதத்தை காண்பீர்கள். இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர், என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரே-32:27) இயேசு கிறிஸ்து ஊழியம் செய்ய நாட்களிலே, லாசரு என்பவன் வியாதிப்பட்டிருந்தான். அவனுடைய சகோதரிகள் மரியாளும், மார்த்தாளும் லாசரு வியாதியாய் இருக்கிறான் என்று இயேசுவுக்கு சொல்லி அனுப்பினார்கள். இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது, தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். இயேசு லாருவின ஊராகிய பெத்தானியாவிற்கு வந்த போது லாசரு மரித்து நாலுநாளாயிற்று. இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர் கொண்டுபோனாள், மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றான். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார்.(யோ 11:20-26). லாசரு மரித்து அடக்கம்பண்ணட்டு நாலுநாளானபோது இயேசு மார்த்தாளை நோக்கி உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான், என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார். இன்றைக்கு தம்மை விசுவாசிப்பவர்களுக்கு தேவன் கொடுக்கும் வாக்குத்தத்தம், உங்கள் வாழ்க்கையில் என்ன காரியங்கள் மரித்த நலமையில் காணப்பட்டு இனி முடியாது என்று நினைக்கிறீர்களோ, அந்த காரியங்களில் இயேசு கிறிஸ்து அற்புதத்தை செய்வார் என்று விசுவாசிக்கிறீர்களா?
பின்பு இயேசு லாசருவை அடக்கம்பண்ணப்பட்ட இடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது, அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.(யோ 11:38-40) இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.(யோ 11:43-44). மரித்துபோன மனிதனை நான்கு நாட்களுக்கு பின்பு உயிரோடு எழுப்ப இயேசு கிறிஸ்துவிற்கு முடியும் என்றால், இதை காட்டிலும் பெரிய காரியங்களை உங்கள் வாழ்க்கையில் தேவன் கிரியை செய்து அற்புதங்களை செய்ய அவரால் முடியும். இன்றைக்கு உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு இயேசு தான். அவரிடத்தில் விசுவாசமாய் இருங்கள். இப்பொழுதே உங்கள் சந்தேகங்களையும் அவிவாசத்தையும் உங்களை விட்டு எடுத்து போடுங்கள். ஆபிரகாம் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை, அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனைமகிமைப்படுத்தினான், ஈசாக்கை பெற்றெடுத்தான். உங்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல் தேவனையும் அவருடைய வாக்குத்தத்ததையும் நம்பி அவரை மகிமைபடுத்துங்கள். அப்பொழுது தேவனுடைய கிரியைகளை உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள்.
மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென், நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். – வெளிப்படுத்தின விசேஷம் 1:18
No comments:
Post a Comment