கிறிஸ்துவில் பிரியமானவர்களே!
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை மனதார வாழ்த்துகிறேன்.
இந்த புதிய மாதத்தில் வாக்குத்தத்தச் செய்தியின் மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புதிய மாதத்தில் தேவன் சங்கீதம் 136ம் அதிகாரம் 23ம் வசனத்தை வாக்குத்தத்தமாக கொடுக்கிறார். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது.(சங் 136:23). கர்த்தர் நம்முடைய தாழ்மையில் நம்மை நினைக்கிறவர். ஒரு மனிதன் நல்ல நிலையில் இருக்கும் போது, செல்வம் பெருகும் போதும் அவனை நினைக்கும் ஏராளனமான பேர் உண்டு. ஆனால் ஒருவன் தாழ்மையில் இருக்கும்போது, தன்னை ஒருவரும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்ற சூழ்நிலையில் இருக்கும் போது, கர்த்தர் ஒருவரே அவனை நனைக்கிறார், அவனோடு இருக்கிறார். கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார், இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.(சங் 115:12)
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார், தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர், என் தேவனே, தாமதியாதேயும்.(சங் 40:17) தாவீது சொல்லுகிறார் நான் சிறுமைபட்டவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார். ஒருவதை நனைப்பது என்பது வேறு, நினைவாயிருப்பது வேறு. நினைப்பது என்பது எப்பொழுதாவது ஒரு முறை ஞாபகத்திற்கு வருவது. நினைவாயிருப்பது எப்பொழுதும், இடைவிடாமல் நினைத்துக்கொண்டே இருப்பது.
உங்கள் வாழ்க்கையில் பல நோரங்களில் குறிப்பாக நீங்கள் கஷ்டங்களை கடந்துபோகும் போதும். தடைகளை சந்திக்கும் போதும் தேவன் உங்களை மறந்துவிட்டார் என்று நினைக்கிறீர்கள். அவர் உங்களை ஒருபோதும் மறப்பதில்லை உங்களை கைவிடுவதுமில்லை. எனவே உங்களை அவருடைய உள்ளங்கையிலே வரைந்துள்ளார். எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படிச் செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது@ என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது. (ஓசியா 11:8) தேவன் உங்களை எப்போதும் நினைத்திருக்கிறபடியினால் நீங்கள் சோர்ந்துபோகாமல், அவர் மேல் விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். அவர் உங்களோடு இருப்பதை உறுதிப்படுத்துவார், உங்களை நிச்சயமாய் மேன்மையாய் வைப்பார்.
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்@ அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள். (1சாமு 1:11) இங்கு பிள்ளை இல்லாத அன்னால் தேவனை நோக்கி ஜெபித்து பொருத்தனை செய்வதை வாசிக்கிறோம். ஜெபித்த அன்னாளை கர்த்தர் நினைத்தருளினார். (1சாமு 1:19) அவள் கேட்டதை பெற்றுக்கொண்டால். சிலநாள் சென்ற பின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.(1சாமு 1:20) அன்னாள் செய்த பொருத்தனையின்படி சாமுவேலை ஆலையத்திற்கு கொண்டுபோய் விட்டாள். கர்த்தர் அன்னாளை நினைத்தருளின படியினால் அவள் மூன்று குமாரரையும், இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள். உங்களுடைய ஜெபங்கள் தேவனுடைய சமூகத்திலே நினைப்பூட்டுதலாய் இருக்கிறது.
ஜெபம் உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. உங்கள் ஜெபவாழ்க்கை எப்படியுள்ளது. எந்த சூழ்நிலையிலும் உங்கள் ஜெபத்தை விட்டுவிடாதிருங்கள். ஏன் எனக்கு மட்டும் ஒன்றும் நிறைவேறாமல் போகிறது, ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு இருக்கிறது. இதற்கு காரணம் நீங்கள் ஜெபிப்பதில்லை. ஜெபிப்பதை விட்டுவிட்டு தேவனையும், மற்றவர்களையும் குறை கூறுகிறீர்கள். நீங்கள் ஜெபத்தில் உறுதியார் தரித்திருப்பதில்லை. யாபேஸ் ஜெபித்தான் அவன் வேண்டிக்கொண்டதை கர்த்தர் தந்தருளினார். யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்@ அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்.(1நாளா 4:10). இன்று முதல் உங்கள் ஜெப வாழ்க்கையை கட்டி எழுப்புங்கள். உங்கள் ஜெபங்கள் தேவ சமூகத்தில் நனைப்பூட்டும். நீங்கள் கேட்பதை பெற்றுக்கொள்வீர்கள். தேவன் உங்கள் வாழ்க்கையில் செய்யும் அதிசயங்களை காண்பீர்கள். சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள், அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. . தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்@ தேவன் அவர்களை நினைத்தருளினார்.(யாத் 2:23-25)
தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.(2நாளா 6:42). தேவன் உங்களுக்கு செய்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றும்படி நினைத்தருளுகிறார். உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர். தேவன் உங்களை நினைத்திருக்கிறார். தேவன் உங்களுக்கு செய்யத வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதாக இந்த மாதத்தில் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்கிறார். இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், ய+தாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.(எரே 33:14)
ஆபிரகாமின் வாழ்க்கையில் தேவன் அவனை பலுகிபெருகப்பண்ணி கொடுத்த வாக்குத்தத்ததை நிறைவேற்ற அவனுக்கு ஒரு நிபந்தனையும் கொடுத்தார். ஆம் ஆபிரகாம் தேவனுக்கு முன்பாக உத்தமனாக இருக்க வேண்டும். ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்@ நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு. (ஆதி 17:1). தேவன் உன்னை ஆசீர்வதித்து வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும்படி உன்னிடத்தில் உத்தமத்ததை எதிர்பார்கிறார். உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய். (உபா 18:13) நீ உத்தமாயிருந்தால் தேவன் தம்முடைய வல்லமையை உன் வாழ்க்கையில் செயல்படுத்த முடியும். உத்தமாயிருப்பவர்களை தேவன் பலுகிப்பெருகும்படி ஆசீர்வதிக்கிறார். தேவனுடைய சத்தத்துக்கு செவிகொடுத்து ஆபிரகாம் அந்நியனும் பரதேசியாய் எல்லாவற்றையும் விட்டு வந்தான். தேவன் அவனுக்கு வாக்குத்தத்தம் செய்து அவனை பலுகிப்பெருகச்செய்தார். தேவன் உன்னையும் ஆபிரகாமைப்போல ஆசீர்வதிக்கப்போகிறார். வாக்குத்தத்தம் நிறைவேறுவதை காண்பீர்கள்.
உத்தமாயிருத்தல் என்பது தேவனுடைய சத்தத்துக்கும், கட்டளைக்கும் கீழ்படிவதாகும். தாவீதைக் குறித்து அவன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்து உத்தமனாயிருந்தான் என்று வேதம் சொல்லுகிறது. நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால், (1இராஜா 9:4). தேவன் சவுலை இஸ்ரவேலின் மேல் இராஜாவாக ஏற்படுத்தினார். ஆனால் சவுல் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல் உத்தமாயிராதபடியினால் ராஜ்யத்தை இழந்தான். தாவீது தேவனுக்கு கீழ்படிந்து உத்தமனாயிருந்து இராஜ்யத்தை பெற்றுக்கொண்டான். அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைப் பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். (1சாமு 15:28). தேவனுக்கு கீழ்படிந்து உத்தமமாயிருங்கள். தேவன் உங்களுக்கு செய்த வாக்குத்தத்தத்தை நினைத்தருளுவதையும், நிறைவேற்றுவதை இந்த மாதத்தில் நீங்கள் காண்பீர்கள்.
இந்த மாதத்தின் வாக்குத்தத்தத்தின்படி தேவன் உங்களை நினைத்தளுகிறார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

No comments:
Post a Comment