Thursday, 5 March 2015

அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். – ஆமோஸ் 9:12

கர்த்தர் நல்லவர்.  அவர் உங்கள் வாழ்க்கையை சீர்படுத்துகிறவர்.  விழுந்துபோனதை திரும்ப எடுப்பித்து கட்டுகிறவர்.  கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா, கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.(சங் 127:1).  இங்கு தேவன் விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து கட்டுவேன் என்று சொல்லுகிறார்.  ஆதியிலே ஜனங்கள் கர்த்தருக்கு கென்று பலிபீடங்களை கட்டி, தங்கள் பாவங்களுக்காக பலி செலுத்தி கிருபாசனத்தண்டை வந்தார்கள்.  பின்பு கர்த்தர் ஜனங்கள் மத்தியில் வாசமாயிருக்க மோசே தேவனுடைய வார்த்தையின் ஆசாரிப்பு கூடாரத்தை அமைத்தார்.  எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டடிருந்தது, அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன, அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும்.  இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது.  அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன, அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.   அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன, இவைகளைக் குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை.(எபி 9:2-5) பின்பு பிரதான ஆசாரியனாகிய ஏலியின் நாட்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாக பெலிஸ்தியர்கள் வந்தபோது ஆசாரிப்பு கூடாரத்திலுள்ள தேவனுடைய உடன்படிக்கை பெட்டி இருந்தால் யுத்தத்தில் ஜெயித்துவிடலாம் என்று இஸ்ரவேல் ஜனங்கள் எண்ணினார்கள்.  எனவே உடன்படிக்கை பெட்டியை யுத்தம் நடந்த இடத்திற்கு எடுத்துச்சென்றார்கள்.  ஆனால் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்களை முறியடித்து உடன்படிக்கை பெட்டியை எடுத்துச் சென்றுவிட்டார்கள்.  தாவீதின் நாட்களில் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி இஸ்ரவேலுக்கு வந்தது.  இந்த உடன்படிக்கை பெட்டியை ஆசாரிப்பு கூடாரம் இருக்கிற கிபியோனுக்கு தான் கொண்டு போகப்பட்டிருக்க வேண்டும்.  இந்த பெட்டி கிபியோனிலுள்ள கூடாரத்திலுள்ள மகாபரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்படவில்லை.  அனால் தேவனுடைய உடன்படிக்கைபெட்டியை தாவீது தாவீதின் நகரமாகிய சீயோன் மலைக்கு கொண்டு வந்தார்.  அங்கே தாவீது தேவனுடைய உடன்படிக்கைபெட்டிக்கு ஒரு கூடாரத்தை ஏற்படுத்தி கர்த்தரடைய பெட்டியை அங்கே வைத்தான்.  இதுவே தாவீதின் கூடாரம்.  

தாவீதின் கூடாரத்தில்  எப்போதும் கர்த்தரை உயர்த்தும் துதியின் சத்தமும், ஆடல் பாடலின் சத்தமும் கேட்கப்பட்டது.  இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.(1நாளா 16:4).  பிரியமானவர்களே இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளின் வீடும் ஒரு தாவீதின் கூடாரம்.  அங்கு எப்பொழுதும் தேவனை துதிக்கும் சத்தமும், ஸ்தோத்திரத்தின் சத்தமும், தேவனை உயர்த்தி பாடும் பாடலின் சத்தமும் கேட்கப்படவேண்டும்.  நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு, கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.(சங் 118:15).  தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து கட்டுவேன் என்று சொல்லுகிற தேவன் உங்கள் வீட்டிலும் எப்போதும் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் கேட்கச்செய்வார்.  உங்களுடைய இரட்சிப்பு விலையேறப்பெற்றது. அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.(எபி 2:4).  இஸ்ரவேல் ஜனங்களை தேவன் எகிப்த்தின் அடிமைதனத்திலிருந்து விடுவித்து சிவந்த சமுத்திரத்தை கடந்து வந்த போது இரட்சிப்பினால் தேவனை துதித்தார்கள்.  அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தihப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்;த்தரைப் பாடுவேன், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார், குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.  கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர், அவர் எனக்கு இரட்சிப்புமானவர், அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன், அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்(யாத் 15:1-2).  இன்றைக்கும் சில வீடுகளில் எப்பொழுதும் சண்டையின் சத்தமும், முறுமுறுப்பும், கோபத்தின் வார்த்தைகளும், எரிச்சலின் வார்த்தைகளும் வெளிப்படுகிறது.  சிலர் வீட்டுக்கு வந்தால் நிம்மதியே இல்லை என்று வருந்துகிறீர்கள்.  இன்று தேவன் விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை திரும்ப எடுப்பித்து கட்டுவார், உங்கள் வீட்டில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் கேட்கும்படி செய்வார்.  கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?(சங் 27:1)

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். – சங்கீதம் 34:1

No comments:

Post a Comment