ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது
கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். – எபேசியர்
5:14
தேவன் உங்களை பிரகாசிக்கசெய்ய வேண்டும் என்று விரும்புகிறார். நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள், மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.(மத் 5:14) நீங்கள் புதிதாக இரட்சிக்கப்பட்டவர்களாய் இருக்கலாம், விசுவாசிகளாக இருக்கலாம், தேவனுடைய ஊழியர்களாக இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்குள் தேவன் பிரகாசிக்க விரும்புகிறார், அது போல உங்களுக்கும் நான் பிரகாசிக்கவேண்டும் என்ற வாஞ்சையும், விருப்பமும் இருக்க வேண்டும். பெரிதான இரட்சிப்பை பெற்று, தேவனுடைய வல்லமையான அபிஷேகத்தால் நிறப்பப்பட்டிருக்கும் நீங்கள் தேவனுக்கென்று எதையாகிலும் ஒரு காரியத்தை செய்து பிரகாசிக்க வேண்டும். எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. இதோ, இருள் ப+மியையும், காரிருள் ஜனங்களையும் மூடும், ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார், அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.(ஏசா 60:1-3). உங்களுடைய வாழ்க்கையில் தாழ்வு மனப்பான்மை இருப்பதால் உங்களால் எழுந்து பிரகாசிக்க முடியவில்லை. எனக்கு படிப்பறிவு இல்லை, எனக்கு ஆவிக்குரிய வரங்கள் இல்லை, என்னில் எந்த ஒரு தாலந்தும் இல்லை நான் எப்படி எழும்பி பிரகாசிக்க முடியும் என்று நீங்கள் கேட்களாம்? நீங்கள் ஆராதிக்கும் இயேசு கிறிஸ்து எந்த மனுஷனையும் பிரகாசிக்க செய்கிறவர். உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.(யோ 1:9). உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பிரகாசிக்க ஜெபம் மிகவும் அவசியம். அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார், அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.(மத் 17:2). ஜெபிப்பது என்பது தேவனோடு உறவாடுகிற ஒரு இனிமையான அனுபவம். இயேசு கிறிஸ்து இரவெல்லாம் ஜெபித்த போது அவருடைய முகம் பிரகாசித்தது. அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.(லூக்கா 9:29). பிரியமானவர்களே, நீங்கள் எவ்வளவுக்கெவளவு அதிகமாக ஜெபிக்கிறீர்களோ அவ்வளக்கவ்வளவு தேவன் உங்களை பிரகாசிக்கச்செய்வார். ஜெபம் தேவனுடைய வல்லமையை உங்களுக்குள் கொண்டுவருகிறது. ஜெபம் உங்களை தேவனுடைய மகிமையினால் நிரப்புகிறது. நீங்கள் எதை செய்தாலும் ஜெபித்து செய்யுங்கள் அப்பொழுத தேவன் உங்களை பிரசாசிக்கச் செய்வதை காண்பீர்கள். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை.(சங் 34:5)
ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.(அப் 6:15). இங்கு ஸ்தேவானை குறித்து வாசிக்கிறோம். அவனுடைய முகம் பிரகாசித்தபடியினால் அவனுடைய முகம் தேவதூதனை போல் இருந்தது. அவனுடைய முகத்தின் பிரகாசத்தை சூழ இருந்த ஜனங்கள் பார்த்தார்கள், ஆலோசனை சங்கத்தார் பார்த்தார்கள், பகைவர்களும் பார்த்தார்கள். ஸ்தேவானுடைய பிரகாசத்திற்கு காரணம் இவருக்குள் பரிசுத்தஆவியானவர் இருந்தார். (அப் 6:5). நீங்கள் எழும்பி பிரகாசிக்க வேண்டுமென்றால் எப்பொழுதும் பரிசுத்த ஆவியினால் நரம்பியிருங்கள். அவருடைய அபிஷேகம் உங்களில் நிறைவாய் காணப்பட்டு, அந்நிய பாஷையினால் தேவனை மகிமைபடுத்திக்கொண்டே இருங்கள். பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.(சகரியா 4:6). பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.(அப் 1:8). சீஷர்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டபோது பலத்த அற்புதங்களும், அடையாளங்களும் செய்தனர். ஒரே நாளில் ஐயாயிரம் ஜனங்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இன்றைக்கு அந்த அடையாளங்களும், அற்புதங்களும் என்ன ஆயிற்று அவைகள் மறைந்து விட்டதா? ஆவைகள் மறைந்து விடவில்லை. ஏனென்றால் இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராய் இருக்கிறார். நீங்கள் தேவனுடைய அபிஷேகத்தால் நிரப்பப்பட்டு அவருக்காய் பிரகாசிக்கும் போது இந்த அற்புத அடையாளங்களை உங்கள் வாழ்க்கையில் காண முடியும். நீங்கள் தேவனுடைய அபிஷேகத்தை பெற்றது உண்மையென்றால் அவருக்காக எழும்பி பிரகாசிக்க வேண்டும். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு, எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.(2தீமோ 4:2). அவருடைய அபிஷேகத்தை பெற்றிருக்கிற உன்னை பார்த்து தேவன் சொல்லுகிறார் மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். இப்பொழுதே உங்களை ஆவியானவருடைய வல்லமைக்கு ஒப்புக்கொடுங்கள், அப்பொழுது உங்கள் வாழ்க்கையில் காணப்படும் போராட்டங்கள், தடைகள் நீங்கி எழும்பி பிரகாசிப்பீர்கள்.
இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. – மத்தேயு 5:14

No comments:
Post a Comment