Wednesday, 13 November 2013





உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். - லூக்கா 11:11-13.


இயேசு கிறிஸ்து தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு; பரிசுத்த ஆவியை கொடுப்பது அதிக நிச்சயம் என்று இங்கு சொல்லுகிறார். ஒரு தகப்பன் தன்னுடைய மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லை கொடுப்பதில்லை. மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுக்கிறதில்லை. முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுக்கிறதில்லை. இயேசு கிறிஸ்து இங்கு மூன்று காரியங்களை குறித்து சொல்லுகிறார். அப்பம், மீன், முட்டை. அதைபோலவே இயேசு கிறிஸ்து உங்களுக்கு கொடுக்கும் பரிசுத்த ஆவியினால் மூன்று ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்கிறீர்கள். முதலாவது பரிசுத்த ஆவி உங்கள் மேல் ஊற்றப்படுகிறதினால் கிடைக்கும் இவு அபிஷேகம். இந்த அபிஷேகம் பரிசுத்தமான அபிஷேகம். பழைய ஏற்பாடுகாலங்களில் ஆசாரியர்கள், இராஜாக்கள், தீர்க்கதரிகள் மேல்இந்த விலையேற்றப்பட்ட அபிஷேகம் ஊற்றப்பட்டது. இன்றைக்கு தேவபிள்ளையாயிருக்கிற உனக்கு இவாக இந்த அபிஷேகம் ஊற்றப்படுகிறது. தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட நீங்கள் விஷேசமானவர்கள். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.(சங் 23:5). என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர், புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.(சங் 92:10). இரண்டாவது பரிசுத்த ஆவி உங்கள் மேல் ஊற்றப்படுகிறதினால் கிடைக்கும் இவு ஆவியின் வரங்கள். ஆவியின் வரங்கள் அவியானவரால் தேவ சித்தத்தின் படி உங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. ஆவியின் வரங்கள் உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.(1கொரி 12:8-10).

இன்றைக்கு உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை சோதித்துப்பாருங்கள். ஆவியின் வரங்கள் உங்கள் வாழ்கையில் காணப்படுகிறதா? தேவன் இவைகளை உங்களுக்கு கொடுப்பது அதிக நிச்சயம். அன்பை நாடுங்கள், ஞானவரங்களையும் விரும்புங்கள், விஷேசமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.(1கொரி 14:1). மூன்றாவது பரிசுத்த ஆவி உங்கள் மேல் ஊற்றப்படுகிறதினால் கிடைக்கும் இவு ஆவியின் கனிகள். நாம் கனிகொடுக்கும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.(யோ 15:16). நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான், என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.(யோ 15:5). ஆவியின் வரங்கள் தேவனுடைய சித்தத்தின் படி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. எல்லா வரங்களையும் எல்லாருக்கும் கொடுப்பதில்லை. ஆனால், ஆவியின் கனிகள் எல்லா மனிதருக்கும் எல்லா கனிகளையும் தேவன் கொடுக்கிறார். பரிசுத்த ஆவியை எப்படி மாமிசமான யாவர் மேலும் ஊற்றப்படுகிறதோ அதை போல ஆவியின் கனிகள் எல்லாருக்கும் கொடுக்கப்படுகிறது. ஆவியின் கனிகள் மூலமாக நீங்கள் பெற்றுள்ள அபிஷேகத்தையும், வரங்களையும் காத்துக்கொள்ள முடியும். கனிகள் இல்லாம் ஆவியின் வரங்கள் கிரியை செய்ய முடியாது. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம், இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.(கலா 5:22-23).


தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. - ரோமர் 14:17.

No comments:

Post a Comment