Wednesday, 13 November 2013





அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது, அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும்முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது. – அப் 3:16

தேவனுடைய நாமத்தினாலே நடந்த அற்பதத்தை குறித்து இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைப்பார்த்து பேதுருவும், யோவானும் நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொன்னபோது உடனே அந்த மனுஷன் சுகத்தை பெற்றுக்கொண்டான். அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன், நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, வலதுகையினால் அவனைப் பிடித்துத்தூக்கிவிட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான், நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.(அப் 3:6-8) அப்போஸ்தலராகிய பவுலும் என்னை பெலப்படுத்தகிற கிறிஸ்தவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலன் உண்டு என்று சொல்லுகிறார். ஆம், இயேசுவின் நாமத்திலே வல்லமை உண்டு, பெலன் உண்டு, எனவே இயேசு உங்களுடைய பெலனாய் இருப்பாரானால் நீங்கள் அசைக்கப்படுவதில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்த்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்து கானான் தேசத்திற்கு தங்கள் பயணத்தை தொடர்ந்த போது பார்வோனும் அவனுடைய சேனைகளும் அவர்களை பின் தொடர்ந்தார்கள். பார்வோன் அவர்களை துரத்திக்கொண்டு பெரிய சேனையோடும், குதிரைகள், இரதங்களின் பெலத்தோடு வந்தான். ஆனால் எந்த ஆயுதமும் இல்லாத இஸ்ரவேல் ஜனங்கள் நிச்சயமாய் அவர்களை எதிர்க்க முடியாது. ஆனால் அவர்கள் கர்த்தரில் பெலன் கொண்டார்கள். மோசே தேவனுடைய ஆலோசனையின்படி தன்னுடைய கோலை நீட்டியபோது சிவந்த சமுத்திரம் பார்வோனையும், அவனுடைய பெரிய சேனைகளையும் மூடிக்கொண்டது. அவர்கள் தேவனுடைய பெலத்தினால் பார்வோனை ஜெயித்தார்கள். எனவே அவர்கள் கர்த்தர் என் பெலன் என்று சொல்லி பாடினார்கள். கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர், அவர் எனக்கு இரட்சிப்புமானவர், அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன், அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்,(யாத் 15:2)


தாவீது ராஜா தேவனுடைய பெலத்தை அறிந்தவர். அவருடைய பெலவீனநேரங்களின் தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து தேவனுடைய பெலத்திலே பெலன் கொண்டார். என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.(சங் 18:1-2) என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.(சங் 18:32) நீங்கள் தேவசமுகத்தில் காத்திருக்கும் போது தேவன் உங்களை நிச்சயமாய் பெலப்படுத்துவார். இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை வல்லமையாய் பயன்படுத்துவதற்காக, அவர்கள் தேவனுடைய பெலத்தினாலே நிறப்பும்படி அவர்களை எருசலேமிலே காதத்திருக்கும்படி கட்டளையிட்டார். அவர்கள் மேல் விட்டு அறையிலே காத்திருந்த போது உன்னதத்தின் பெலத்தினால் நிறப்பப்பட்டார்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.(அப் 1:5) பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.(அப் 1:8) தேவ சமுகத்தில் நீங்கள் காத்திருப்பது ஒருநாளும் வீணாய் போவதில்லை. மரியாள் தேவ சமுகத்தில் காத்திருந்த போது நல்ல பங்கை பெற்றுக்கொண்டாள். எலியா தீர்;க்கதரிசி கேரீத் அற்றங்கறையில் காத்திருந்தார் கர்த்தர் தம்முடைய பெலத்தினால் இடைகட்டினார். நீங்கள் தேவனுடைய பாதத்தில் காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் உங்களுக்கு பலன் உண்டு. நிச்சயமாய் கர்த்தர் உங்களை பெலப்படுத்துவார். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.(ஏசா 40:31)


ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது, தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர், உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு, எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். – 1நாளாகமம் 29:12

No comments:

Post a Comment