என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள், நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன், நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன். – ஓசியா 4:6
என் ஜனங்கள் சங்காரமாகிறார்கள் என்று தேவன் சொல்கிறார். தேவ ஜனங்கள் சங்காரமாகிறதற்கு காரணம் என்ன? தேவன் அவர்களை நேசிக்கவில்லை என்பதால் அல்ல, தேவன் அவர்களை ஆதரிக்கவில்லை என்பதாலோ, தேவன் அவர்களை பாதுகாக்கவில்லை என்பதாலோ அல்ல. அவர்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள் என்று தேவன் சொல்லுகிறார். என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள், அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள், அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டுபோகிறார்கள்.(ஏசாயா 5:13). என் ஜனங்கள் என்று தேவன் சொல்லும் போது நம்மை சொல்கிறார், தம்முடைய இரத்தத்தினால் கழுவப்பட்ட ஜனங்களை தேவன் சொல்லுகிறார். அப்படியானால் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள் என்று தேவன் எந்த அறிவை குறித்து சொல்லுகிறார். இந்த அறிவு தேவனுடைய வார்த்தையில் காணப்படுகிற அறிவாகும். நாம் எப்படி நம்முடைய சூழ்நிலைகளையும், பிரச்சனைகளையும் ஜெயிப்பது. நாம் எப்படி விசுவாசத்தில் நடப்பது. நம்முடைய ஜெபத்திற்கு எப்படி பதிலை பெற்றுக்கொள்வது. பாவத்தை ஜெயித்து பரிசுத்தமாய் எப்படி வாழ்வது. எப்படி சாத்தானை எதிர்த்து நிற்பது போன்ற அனைத்தையும் அறிந்து கொள்ளும் அறிவை குறித்து பேசுகிறார். தேவனுடைய வார்த்தையிலிருந்து அவைகள் அனைத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். தேவனுடைய வார்த்தையில் இருக்கும் இந்த மகத்தவத்தை இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளைகளும் அறியாதிருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் நெருக்கத்தை சந்திக்கும் போது தேவனுடைய வார்த்தையை தேடாமல் மனிதர்களை நாடுகிறார்கள். உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.(சங் 119:105) வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுவதினால்தானே.(சங் 119:9)
உங்கள் வாழ்க்கையின் பிரச்சனைகளக்கும் போராட்டங்களுக்கும் தேவன் ஒருபோதும் காரணர் அல்ல. தேவன் உங்களுக்கு தேவையான அனைத்தையும் முன்பே ஆயத்தப்படுத்திவிட்டார். நாம் தான் அவைகளை தேடி சுதந்தரித்துக்கொள்ள வேண்டும். எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை,(1கொரி 2:9) உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!(சங்கீதம் 31:19) தேவன் உங்களுக்காக முன்பே அயத்தம் செய்திருக்கிற காரியங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு இவைகள் தெரியாவிட்டால் எப்படி அவைகளை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இவைகளை பெற்றுக்கொள்ள தேவ ஞானம் நமக்கு தேவை. இந்த ஞானத்தை நமக்கு கொடுப்பது தான் தேவனுடைய வார்த்தை. நீங்கள் இந்த அறிவை பெற்றுக்கொள்ள கூடாது என்று சாத்தான் தன்னால் முடிந்தவரை பல வழிகளிலே கிரியை செய்கிறான். எப்போதும் உங்களுக்கு ஏதாவது வேளையை கொடுத்து நீங்கள் வேதத்தை வாசிக்க அவன் விடுவதில்லை. உங்களுக்கு தேவனுடைய வார்த்தையை போதிக்கும் நபர்களிடம் காணப்படும் உங்களுக்கு பிடிக்காத சுபாவத்தை காட்டி அவர்கள் உங்களுக்கு சொல்லும் வேத ஆலோசனைகளை நீங்கள் கேட்கவிடாமல் செய்கிறான். தேவனுடைய வார்த்தையில் இருப்பவைகளை நீங்கள் அறிந்து கொள்வதை காட்டிலும் உலக காரியங்களில் உங்களை ஈடுபடசெய்து தேவனுடைய வார்த்தையை நீங்கள் அறிந்துகொள்வதை தடை செய்கிறான். நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு முக்கியதுவம் கொடுக்காதபடியினால், என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள், நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன், நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன் என்று தேவன் சொல்லுகிறார். இன்றுமுதல் தேவனுடைய வார்த்தையை வாசியுங்கள் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்தும் ஞானத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள், ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள், ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். – மத்தேயு 23:2-3
No comments:
Post a Comment