கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவராக, - 1பேதுரு 5:10
நீங்கள் ஆராதிக்கிர தேவன் உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சீர்படுத்துகிறவர். நம்முடைய அனுதின வாழ்வில் நம்முடைய தேவைகளுக்காக எத்தனையோ பொருட்களை வாங்குகிறோம. நம்முடைய பொருட்கள் உடைத்து விட்டால் அவைகளை புதுப்பித்து சீர்படுத்துகிறோம். அந்த பொருட்கள் மனிதனால் உணடாக்கப்பட்டபடியினால் மனிதனால் அவைகளை சரிசெய்து, புதுப்பித்து சீர்படுத்தமுடிகிறது. அதுபோல உங்கள் வாழ்க்கையில் தவறுகளை சரிசெய்ய உங்களை உருவாக்கின தேவனால் மட்டுமே முடியும். தேனாகிய கர்த்தர் மட்டுமே உங்களை புதுப்பித்து உங்கள் வாழ்வை சீர்படுத்தமுடியும். இன்றைக்கும் பல இழப்புகள் நிமித்தம் சோர்ந்து போய் காணப்படுகிற உங்கள் வாழ்க்கையை சீர்படுத்துவேன் என்று தேவன் சொல்லுகிறார். முந்தினவைகளை நினைக்கவேண்டாம், ப+ர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.(ஏசாயா 43:18-19). தேவனாகிய கர்த்தர் உங்கள்; சிருஷ்டி கர்த்தர். அவர் உன் வாழ்கையை சீர்படுத்தவேண்டுமானால் நீங்கள் உங்களை முற்றிலும் அவரிடத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.(சங் 37:5). தேவனுடைய கரத்தில் நீங்கள் களிமண். அவர் உன்னை புதிய பாத்திரமாக, பயன்படுத்தப்படும் விலையேறபெற்ற பாத்திரமாக உருவாக்க விரும்புகிறார். எனவே உங்களை அவருடைய கரத்தில், தேவனுடைய சித்தமான வழியில் உங்களை நடத்த ஒப்புக்கொடுங்கள். நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ, அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான். குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று, அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான். அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்: இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார், இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.(எரே 18:2-6).
இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கை சிதைக்கப்பட்டு காணப்படுகிற காரணம் சுயமாகும். எப்பொழுதும் மற்றவர்கள் உங்களை புகழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். மற்றவர்கள் நீங்கள் விரும்பும் வழியில் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நீங்கள் தேவனுடைய வமியில் நடக்காமல், தேவன் உங்களுடைய சுயவிருப்பம் நிறைவேற்றுவதையே விரும்புகிறீர்கள். எனவே உங்களால் உங்கள் வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. பிரியமானவர்களே, தேவன் உங்களை மேன்மையாக உயாத்தும்படி ஒரு நோக்கத்தை வைத்துள்ளார். ஆனால் தேவன் உங்களை உயர்த்தும் வரை நீங்கள் காத்திராமல,; உங்கள் சுய இச்சைகளின்படி நடந்து தேவனுடைய திட்டங்களை சிதைக்கிறீர்கள். தேவன் உங்களை சீர்படுத்தும்படியாய் ஒரு குயவன் போல உங்களை வழிநடத்துகிறார். குயவன் மண்பாண்டத்தை நன்றாக வனையும்படியாய் அதை உடைப்பது போல உங்களையும் சீர்படுத்துகிறார். அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார். அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.(யோபு 5:18). ஆம் உன் வாழ்கையில் தேவன் அனுமதித்திருக்கும் போராட்டங்கள் அனைத்தும் நீ உன்னை அறிந்து, தேவனுடைய வழியில் நீ திரும்புவதற்காக தான். உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். (உபா 8:2-3). பிரியமானவர்களே! தேவனுடைய வார்த்தை உங்களுக்காய் கடந்து வருகிறது, தேவன் உன் குடும்பத்தையும், உன்னுடைய ஜீவியத்தையும் சரி செய்யபோகிறார். தேவனிடத்தில் உங்களை முழுமையாக ஒப்புகொடுங்கள், ஆம் தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்துகிறார்.
நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர். - யோபு 22:23
No comments:
Post a Comment