உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். - மீகா 7:15.
இன்றைக்கு தேவன் உங்களுக்கு சொல்லும் வார்த்தை உன்னை அதிசயங்களை காணப்பண்ணுவேன். நீ ஆராதிக்கிற தேவன் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசங்களையும் செய்கிற தேவன். ஓவ்வொரு முறையும் உஙகளுடைய சூழ்;நிலைகளில் யார் எனக்கு உதவி செய்வார் என்ற கேள்வியோடு நீ காணப்படுகிறீர்கள். உங்களுக்கு நான் துணை நிற்கிறேன் என்று தேவன் சொல்லுகிறார். யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை, நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன், நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. (ஏசா 44:21). இஸ்ரவேல் ஜனங்களை கானான் தேசத்திற்கு வழிநடத்தின தேவன், மோசேக்கு பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை செய்வேன் என்று வாக்கு கொடுத்தார். அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன். பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன். உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள். உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.(யாத் 34:10). தேவன் சொன்ன வாக்குத்தத்தத்தை நிறைவேற்றினார். இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது வருடங்கள் தேவனுடைய அதிசயங்களை வனாந்திரத்தில் அனுபவித்தார்கள். இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கையிலும் தேவன் அதிசயங்களை செய்யப்போகிறார். நீங்கள் தேவனுடைய அற்புதங்களையும், அதிசயங்களையும் எப்படி பெற்றுக்கொள்வீர்கள்? அன்றைக்கு யோசுவாவிற்கு தேவன் அற்புதங்களை பெற்றுக்கொள்ளும் வழியை வெளிப்படுத்தினார். யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.(யோசுவா 3:5). தேவன் யோசுவாவுக்கு சொன்ன அதே வார்த்தையை உனக்கும் சொல்லுகிறார். உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப்பிரிவினை உண்டாக்குகிறது, உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.(ஏசா 59:2). இன்றைக்கு உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள் உங்களை தேவன் அதிசயங்களைக் காணப்பண்ணுவார். நம்முடைய பாவங்களே தேவனிடத்திலிருந்து அதிசயங்களையும், அற்புதங்களையும் பெற்றுகொள்ள முடியாமல் தேவனுடைய முகத்தை நமக்கு மறைக்கிறது. உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.(எரே 5:25).
இன்றைக்கு தேவ சமுகத்திலே உங்களை ஒப்புகொடுங்கள் தேவன் உங்கள் பரிசுத்தம் செய்வார், உங்களை அதிசங்களை காணப்பண்ணுவார். நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களறநம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.(வெளி 1:6). முதலாவது உங்களை பரிசுத்தம் செய்வது அவருடைய இரத்தமாகும். இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களுக்காய் தன்னுடைய இரத்தத்தை சிந்தினார். தன்னுடைய ஜீவனை சொடுத்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்கும் போது அவருடைய இரத்தம் உங்களை சுத்திகரிக்கிறது. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள். ஆயினும் கர்;த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.(1கொரி 6:11). தேவனுடைய நாமம் உங்களை பரிசுத்தம் செய்கிறது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக, ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.(மத் 1:21) ஆம் இயேசு என்றால் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார். அவருடைய நாமத்தை நீங்கள் அறிக்கை செய்யும் போது நீங்கள் சுத்திகரிக்கப்படுகிறீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசம் செய்யும்போது நீங்கள் சுத்திகரிக்கப்படுகிறீர்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவih உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.(யோ 16:7-8). மேலும் தேவனுடைய வார்த்தையினாலும் நீங்கள் சுத்திகரிக்கப்படுகிறீர்கள். நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். (யோ 15:3). இன்றைக்கு உங்களை பரிசுத்தப்படுத்தும்படி தேவ சமுகத்தில் ஒப்புக்கொடுங்கள், தேவன் உங்களை சுத்திகரித்து உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவார்.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். – யோவான் 14:12

No comments:
Post a Comment