அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார் என்றான், அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டார்கள். - 1நாளாகமம் 14:11.
தேவன் தாவீதின் வாழ்கையிலே அவனுடைய கையினாலே அவன் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார். தாவீதுக்கு விரோதமாக அநேகர் சத்துருக்களாக எழும்பினர். தேவன் தாவீதோடு இருந்து அவனுடைய கையினாலே அவன் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார். அவனுடைய சத்துருக்களால் அவனுக்கு முன்பாக நிற்க முடியவில்லை, அவர்களை தாவீது முறியடிக்கும் போது அடைக்கப்பட்ட தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல அவர்கள் அவனைவிட்டு புறப்பட்டு ஓடினார்கள். அவனுக்கு எதிராக சத்துருக்கள் வெள்ளம் போல காணப்பட்டார்கள். வெள்ளம் போல சத்துருக்கள் உங்களுக்கு விரோதமாக வருகிறார்களா? அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசை தொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள், வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். (ஏசாயா 59:19). உங்களுடைய வாழ்கையிலும் இன்று உனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிற சத்துருக்களை தேவன் உன்னுடைய கையினாலே முறியடிக்கப்போகிறார். உங்களுக்காக யுத்தம் செய்ய கர்த்தருடைய ஆவியானவர் ஆயத்தமாய் இருக்கிறார். இன்றைக்கு கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருக்கிறபடியினால் உனக்கு விரோதமாய் கிரியை செய்யும் மனிதர்களுடைய சூழ்ச்சிகளையெல்லாம் தேவன் முறியடிப்பார். உனக்கு விரோதமாய் எழும்பி இருக்கிறவர்கள் நிமித்தம், உன் இருதயத்தில் காணப்படுகிற துக்கங்களும், கலக்கங்களும் அகன்று போகும். இரட்சிப்பின் சந்தோஷத்தால் கர்த்தர் உன் இருதயத்தை நிறப்புவார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.(ஏசா 60:20).
தாவீதின் வாழ்கையில் அவனுக்கு நன்றாக யுத்தம் செய்யும் பராக்கிரம சாலிகள் அநேகர் இருந்தாலும், தேவனே அவனுக்கு ஆலோசனை தந்து யுத்தத்தில் ஜெயத்தை கொடுத்தார். தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான், சேனைகளுடைய கர்த்தர் அவனோடுகூட இருந்தார்.(1நாளா 11:9). தேவன் தாவீதின் கையினாலே அவன் சத்துருக்களை முறியடிப்பதற்கு தேவன் அவனை பழக்குவித்தார். என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.(சங் 144:1). தாவீதை தேவன் பழக்குவித்தபடியினால் ஒவ்வொரு முறையும் யுத்தம் வரும் போது தேவனுடைய ஆலோசனைக்காக தாவீது காத்திருந்தான். பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.(1நாளா 14:9-10). பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு, பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.(1நாளா 14:13-15) தேவன் ஆலோசனை கொடுக்கும் போது அதற்கு கீழ்படிந்து யுத்தம் செய்தான், எதிராளிகளை முறியடித்தான். தாவீதை யுத்தத்திற்கு பழக்குவித்த தேவன் உங்களையும் பழக்குவிக்கிறார். இன்றைக்கு உங்களுக்கு எதிராய் இருக்கிற சத்துருக்களுக்கு முன்பாக, அவர்களை உங்கள் கைகளினால் உடைந்தோடப்பண்ண தாவீதை போல தேவனுடைய சத்தத்திற்கும், ஆலோசனைக்காகவும் காத்திருந்து அதன்படி செய்யுங்கள். தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.(1நாளா 14:16).
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்ட ஓடிப்போவான். - யாக்கோபு 4:7.
No comments:
Post a Comment