
அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும். – எண்ணாகமம் 24:17.
ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் என்று இயேசு கிறிஸ்துவின் பிறப்iபை குறித்து பல நூற்றாண்டுகளுக்கு முன் பிலேயாம் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக முன் உரைத்தான். அந்த நட்சத்திரமாகிய இயேசு கிறிஸ்து உன் வாழ்கையில் பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறார்.
யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். (மத் 2:2). கிழக்கு திசை என்பது வேதத்தின்படி பாவத்தை குறிக்கிறது. ஏதேன் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் பாவம் செய்ததினால் தேவன் அவர்களை துரத்தியபொழுது கிழக்கு நோக்கி அவர்கள் சென்றார்கள். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஐPவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். (ஆதி 3:24). பாவத்தில் மாண்டு இருந்த ஜனங்களை மீட்கும் அடையாளமாக கிழக்கு திசையில் அவருடைய நட்சத்திரம் காணப்பட்டது.
யூதேயா தேசத்தை ஏரோது என்ற ராஜா ஆண்டு கொண்டிருந்தபொழுதுதான் பெத்லகேமில் இயேசு பிறந்தார். ய+தேயா தேசத்திலுள்ள பெத்லகேமே,ய+தாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். (மத் 2:6). இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிந்த சாஸ்திரிகள் அவரை பணிந்துகொள்ள வந்தார்கள். அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். (மத் 2:7-8).
ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். (மத் 2:9-10). சாஸ்திரிகள் நட்சத்திரத்தை கண்டு சந்தோஷம் அடைந்தது போல, ஒவ்வொரு மனிதனுடைய இருதயத்திலும் இயேசு கிறிஸ்த வரும்போது அவர்கள் மிகுந்த சந்தொஷம் பெறுகிறார்கள். ஆம் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். (யோ 16:20). இயேசு கிறிஸ்து பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாய் உன் இருதயத்தில் வரும்போது உன் உள்ளத்தில் இருள் நீங்கி வெளிச்சம் உதிக்கும். பிரியமானவர்களே! ஒரு வேளை நீங்கள் கடந்து போகும் சூழ்நிலை இருளைப்போல காணப்படலாம் ஆனால் தேவன் உன் வாழ்கையை பிரகாசிக்கச் செய்வார். அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். (மத் 12:20).
அன்று சாஸ்திரிகளை சரியாக வழிநடத்திய நட்சத்திரம் இன்றும் உனக்கு முன்பாக சென்றுகொண்டிருக்கிறது. நீங்கள் கடன் பிரச்சனையினால் ஒடுக்கப்பட்டாலும், வேலை கிடைக்காததால், கஷ்டப்பட்டாலும், அல்லது வியாதியினால் நெருக்கப்பட்டாலும், உங்கள் வாழ்க்கையை பிரகாசிக்கச்செய்யும்படியாய் உங்கள் வாழ்க்கையில் இயேசு நட்சத்திரம் போல் முன் செல்கிறார். நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். (ஏசா 45:2). தடைகளை நீக்கிப் போடுகிறவர் உங்களுக்கு முன்பாக நடந்து போகிறார். இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. (ஏசா 48:17). அவர் மேல் விசுவாசம் வைத்து அவரை நம்பி தைரியமாயிருங்கள். இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். (2கொரி 4:6). இயேசுவே அல்லாமல் ஒருவரும் பரலோகத்திற்கு வரஇயலாது. நட்சத்திரமாகிய இயேசு கிறிஸ்து உங்களை வழிநடத்த நீங்கள் அவருடைய ஆலோசனையின் படி செய்யும்போது நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள் உங்கள் எல்லைகளை தேவன் பெரிதாக்குவார்.
இயேசு கிறிஸ்து உன்னை நட்சத்திரமாய் வழிநடத்துவது மாத்திரமல்ல, உனக்காக யுத்தம்பண்ணும் நட்சத்திரமாக இருக்கிறார். வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று. நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம்பண்ணின. (நியா 5:20). இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை மறந்து விக்கிரகத்தை வழிபட்டதினால் தேவன் அவர்களை சிசெராவின் வசம் விற்றுபோட்டார். சிசெராவினால் இஸ்ரவேல் ஜனங்கள் வேதனை அடைந்து கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். சிசெராவுக்கு தொளாயிரம் இருப்புரதங்கள் இருந்தது. எனவே கர்த்தருடைய நட்சத்திரங்கள் சிசெராவோடு யுத்தம்பண்ணினதால் அவன் தோற்றுப்போனான். வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். (ஏசா 59:19). பிரியமானவர்களே! உங்களுக்காக யுத்தம்பண்ணும் நட்சத்திரமாகிய இயேசு உங்களோடு இருக்கிறார். அவர் நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்ளுவதற்கும் அதிகமாகவே செய்ய வல்லமையுள்ளவர். அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். (வெளி 19:11).
இயேசு கிறிஸ்து உனக்காக யுத்தம்பண்ணுகிறார் என்பதை நீ அறிவாயா? உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார். (யோசுவா 23:10). கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். நீங்கள் நெருக்கப்படும் நேரத்தில் உங்களால் பொறுமையாக தேவன் யுத்தம் செய்யும்படியாய் அமைதியாக இருக்கமுடிகிறது. தேவன் யுத்தம் செய்யும்படியாய் நீங்கள் செய்யும்படியாய் அமைதியாக இருக்க வேண்டுமென்றால், உங்கள் சூழ்நிலை அனைத்தையும் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டு அவர் உங்களுக்கு வழிகளை திறக்கும்வரை காத்திருக்க வேண்டும். இதுவே உங்களுக்கு ஆசீர்வாதம். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். (1பேதுரு 5:6). உங்கள் வாழ்க்கை ஒரு புயலைப்போல காணப்படுகிறதா? நீங்கள் அக்கினியில் நடப்பதை போல உணர்கிறீர்களா? பயப்படாதிருங்கள் உங்களுக்காக யுத்தம் செய்கிற தேவன் உங்களோடு இருக்கிறார். நீங்கள் தேவனாலே அற்புதத்தை பெற்றுக்கொள்வீர்கள்.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். (ஏசா 9:6). இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் அசீர்வாதம் உங்களோடு இருப்பதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.
No comments:
Post a Comment