Thursday, 2 January 2014


தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். - 1நாளாகமம் 13:14

தேவன் ஒரு மனிதனை ஆசீர்வதிக்கும் போது, அதன் மூலம் அவனுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதிக்கிறார். யோபு தேவனுக்கு முன்பாக உத்தமனாய் வாழ்ந்தான். ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்@ அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.(யோபு 1:1). தேவன் யோபுவை ஆசீர்வதிக்கும் போது அவனுடைய குடும்பத்தினரையும், அவனுடைய வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும், அவனுடைய கையின் பிரயாசத்தையும் ஆசீர்வதித்தார். நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர். அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. (யோபு 1:10). யோபுவை தேவன் எப்படி ஆசீர்வதித்தாரோ, அதைப்போல உங்களையும் இன்று ஆசீர்வதிக்கிறார். உன்னோடு கூட உன் குடும்பத்தினரும், உங்கள் கையின் பிரயாசத்தையும், உங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதிக்கிறார். தேவன் உங்களை முற்றிலும் ஆசீர்வதிக்கும்படியாய் உங்களை சுற்றிலும் வேலியடைத்திருக்கிறார். கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன். (ஏசா 27:3). தேவன் ஓபேத்ஏதோமின் வீட்டை ஆசீர்வதிக்க காரணம் என்ன? தேவனுடைய உடன்படிக்கை பெட்டியை ஆசாரியர்கள் தான் சுமர்ந்து கொண்டு வர வேண்டும். ஆனால் தாவீது தன்னுடைய ஜனங்களோடு, மாட்டுவண்டியில், கொண்டுவந்தான் எனவே தேவனுடைய உடன்படிக்கை பெட்டியை கொண்டுவரும்போது பிரச்சனைகள் ஏற்படுகிறது. அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான். அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்@ அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.(1நாளா 13:9-10). அப்பொழுது, ஓபேத்ஏதோம் தன் வீட்டில் தேவனுடைய உடன்படிக்கை பெட்டி தங்குவதற்கு இடம் கொடுக்கிறான், எனவே தேவன் ஓபேத்ஏதோமின் வீட்டை ஆசீர்வதிக்கிறார். இன்றைக்கு தேவனுடைய வார்த்தையே தேவனுடைய உடன்படிக்கை பெட்டி.


தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் வீட்டில் இடம் கொடுக்கிறீர்களா? தேவனுடைய வார்த்தைக்கு இடம் கொடுத்தல் என்றால் என்ன? அல்லாமலும் நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்.(யாக் 1:22-23). தேவனுடைய வார்த்தையை வாசித்து, அதற்கு கீழ்படிற்து அதன்படி நடப்பதே தேவனுடைய உடன்படிக்கை பெட்டிக்கு இடம் கொடுத்தல். நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறார்கள், தேவனுடைய வார்த்தையை மனப்பாடமாக சொல்ல உங்களால் முடியும். ஆனால் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அதன்படி நடப்பதில்லை. எனவே உங்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய வேலி காணப்படவில்லை. தேவனுடைய வார்த்தையில் சொல்லப்பட்ட காரியங்களை காட்டிலும் மனிதனுடைய வார்த்தைகளுக்கே நடங்குகிறீர்கள். நீங்கள் மனிதர்களின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்கும் போது தேவனுடைய வார்த்தையை உதாசீனம் செய்கிறீர்கள். இதன் நிமித்தம் உங்கள் அவர்களுடைய குடும்பத்தில் அசீர்வாதமில்லை, உங்கள் குடும்பங்களில் சமாதானம் இல்லை. குடும்பங்கள் பிரிவிணை காணப்படுகிறது. கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டை ஆசீர்வதித்ததை கண்டு, தாவீது அதின் இரகசியத்தை அறிந்து கொண்டான். ஆம் தேவனுடைய பெட்டியை ஆசாரியர்கள் தான் சுமர்ந்து கொண்டு வர வேண்டும் என்ற தேவ கட்டளையை அறிந்து அதன் படி செய்தான். பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது, தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான். (1நாளா 15:2). தேவனுடைய கட்டளையின் படி தாவீது செய்த போது தேவன் தாவீதையும் அவனுடைய குடும்பத்தையும் ஆசீர்வதித்தார். தாவீதைச் சுற்றியிருந்த அவனுடைய எல்லா சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி இளைபாறப்பண்ணினார். தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான். சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். (2சாமு 5:10). இன்றைக்கு தேவனுடைய வார்த்தையின் படி நடக்க உங்களை ஒப்புக்கொடுங்கள் உங்கள் குடும்பத்தில் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவதையும், உங்களுக்கு உண்டான அனைத்தும் ஆசீர்வதிக்கப்படுவதையும் காhண்பீர்கள்.

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில்
எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். - யோசுவா 1:8

No comments:

Post a Comment