Thursday, 2 January 2014


அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன், அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். - ஏசாயா 57:18


துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன் என்று தேவன் இன்றைக்கு சொல்லுகிறார். இந்த உலகத்தில் நமக்கு உபத்திரவம் உண்டு, உபத்திரங்கள், போராட்டங்கள் இல்லாமல் நாம் தேவனுடைய ராஜ்யத்தை அடைய முடியாது. சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.(அப் 14:22). ஆப்போஸ்தலராகிய பவுலின் அனுபவத்தில் உபத்திரவத்தில் இரண்டு விதமான ஆறுதலை குறித்து சொல்லுகிறார். ஒன்று உபத்திரவத்தில் கர்த்தர் தரும் ஆறுதல். மற்றொன்று மற்றவர்களுடைய உபத்திரவத்தில் ஆறுதல் சொல்ல கர்த்தர் பவுலைப் பயன்படுத்துகிறது. தேவன் பவுலுக்கு உபத்திரத்தில் ஆறுதல் தந்த படியினால் பவுல் அதை லேசான உபத்திரவம் என்று சொல்லுகிறார். மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகைள நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.(2கொரி 4:17). உங்களுடைய போராட்டத்தின் மத்தியிலும், உபத்திரவத்தின் மத்தியிலும் உங்களுக்கு தேவன் ஆறுதல் தருகிறபடியினால் உங்களுடைய உபத்திரவம் லேசான உபத்திரவம். தாவீது அவனுடைய எதிரிகளாலும், அவனுடைய வீட்டாராளும் பல போராட்டங்களையும் உபத்திரவங்களையும் சந்தித்தான். அவனுடைய எல்லா உபத்திரவத்திலேயும் கர்த்தர் ஆறுதல் அளித்ததாக சொல்லுகிறான். என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.(சங் 94:19). கர்த்தர் அவனுக்கு ஆறுதலை தந்தபடியினால் நான் உபத்திரவப்பட்டது நல்லது என்று சொல்கிறான். நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.(சங் 119:71). நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழி தப்பி நடந்தேன், இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.(சங் 119:67). தாவீதும், பவுலும் தங்கள் வாழ்கையில் உபத்திரங்களை குறித்த சொன்னது போல நீங்கள் சொல்ல முடியுமா? அவர்களுடைய உபத்திரத்தில் கர்த்தர் அவர்களுக்கு ஆறுதல் கொடுத்தார். கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்கு ஆறுதலை தந்தது. நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. (சங் 119:49-50). உங்கள் உபத்திரவ நாட்களில் எப்பொழுதாவது கர்த்தருடைய வார்த்தைக்கு காத்திருக்கிறீர்களா? நீங்கள் கர்த்தருடைய வார்த்தைக்காய் காத்திருக்காத படியினால் பயமும் திகிலும் உங்களை மேற்கொண்டது. சமாதானம் இல்லாமல் காணப்படுகிறீர்கள். பிரியமானவர்களே, இப்பொழுதே கர்த்தருடைய வார்த்தைக்காய் காத்திருங்கள் அவருடைய வார்த்தை உங்களுக்கு ஆறுதல் தரும். உங்களுடைய உபத்திரவத்தை லேசானதாய் மாற்றிவிடும். தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.(ரோம 15:4).



தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப்பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும்
உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.(1கொரி 14:3). இயேசு உயிர்தெழுந்த பின்பு அவருடைய கல்லரையில் அவரை காணாது சீஷர்கள் பிரமிப்படைந்தார்கள். ஆச்சரியப்பட்டார்கள், அவர்களால் இயேசு உயிர்தெழுந்ததை நம்பமுடியவில்லை. இரண்டு சீஷர்கள் எம்மாவு என்னும் கிராமத்திற்கு கடந்த சென்றார்கள். அப்பொழுது இயேசுவும் அவர்களோடு சென்றார். ஆனாலும் அவih அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.(லூக் 24:16). அப்பொழுத அவர்கள் துக்கத்தோடு காரியங்களை குறித்து பேசிக்கொண்டு சென்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு தீர்க்கதரிசன வார்த்தைகளை அவர்களுக்கு விவரித்து சொன்னார். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.(லூக் 24:25-27). தீர்க்கதரிசன வார்த்தைகளை இயேசு வெளிப்படித்தின போது அவர்கள் ஒரு பெரிய மாற்றத்தை கண்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒருவihயொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,(லூக் 24:32). கர்த்தர் தீர்க்கதரிசனம் மூலமாக உங்களுக்கும் ஆறுதல் தருகிறார். அன்றைக்கு சவுலை கர்த்தர் இராஜாவாக தெரிந்து கொண்டார். சவுல் சாமுவேலை சந்திக்கும் போது காணாமல் போன கழுதையை குறித்து கவலையோடு காணப்பட்டான். கர்த்தருடைய திட்டம் சவுலின் வாழ்கையில் நிறைவேறும்படியாய் தீர்க்கதரிசனம் மூலமாக கர்த்தர் சவுலுக்கு ஆறுதல் சொன்னார். மூன்றுநாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவைகள் அகப்பட்டது. இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான்.(1சாமு 9:20). சவுல் ஆறுதல் பெற்று தேவனுடைய திட்டத்தையும், தேவனுடைய சித்தத்தையும் பெற்று கொண்டு சமாதானத்தோடு கடந்த சென்றான். இன்றைக்கு என் வாழ்கையின் எதிர்காலம் என்ன? எப்படியாகுமோ என்று கலக்கத்தோடு இருக்கிற நீங்கள் இப்பொழுதே தேவனுடைய சமுகத்தில் அவருடைய தீர்க்கதரிசனத்திற்காய் காத்திருங்கள். கர்த்தர் உன்னோடு தீர்க்கதரிசனமாக, திட்டவட்டமாய் பேசி உன்னை வழிநடத்துவார். அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு. பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும் (2பேது 1:19).


நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனாலே எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் அறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். - 2கொரிந்தியர் 1:3-4.

No comments:

Post a Comment