Monday, 16 February 2015

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு, கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். – யோவேல் 2:21

தேவன் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய காரியங்களை செய்யப்போகிறார்.  தேவன் செய்யும் பெரிய காரியங்களை நீங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றால், உங்களுக்கு பெரிய காரியங்களை செய்யும் அவர் பெரியவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது. நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவரில்லை. உம்மைத் தவிர வேறு தேவனும் இல்லை.(2சாமு 7:22)   நம் தேவன் பெரியவர்.  அவர் எல்லா தேவர்களிலும் பெரியவர்.  கர்த்தர் எல்லாத் தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன். அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி,(யாத் 18:11).  இதை குறித்து அப்போஸ்தலனாகிய யோவான் எழுதும் போது உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர் என்று சொல்லுகிறார்.  பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள், ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.(1யோ 4:4)  அவர் பெரியவர் என்று சொல்லும் போது அவர் உங்களில் இருக்கிறார் என்று சொல்லுகிறார்.    பிரியமானவர்களே, தேவன் உங்களுக்குள் பெரியவராய் இருக்கிறார், ஆனால் நீங்கள் அதை அறியாமல் இருக்கிறீர்கள்.  எனவே உங்களுடைய பிரச்சனைகளும், போராட்டங்களும், வேதனைகளும் உங்களுக்கு பெரியதாகவே தெரிகிறது.  அவர் சாத்தானிலும் பெரியவர்.  உங்களுக்கு விரோதமாய் காணப்படும் எல்லாவற்றிலேயும் அவர் பெரியவர்.  எனவே தேவன் உங்களுக்குள் இருப்பதை அறிந்து கொண்டால் மற்றவைகள் எல்லாம் உங்களுக்கு எளிதாக தெரியும்.   ஆம் அவர் பரிசுத்த ஆவியானவராய் உங்களுக்குள் வாசம் செய்கிறார்.  அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக, நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?   கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?   தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.   ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(2கொரி 6:14-17)


நீங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் காரியங்களை எப்படி பார்க்கிறீர்கள்? யோசுவா, காவேப்பை தவிர தேசத்தை லேவு பார்க்கச் மற்றவர்கள் தேவன் வாக்குத்தத்தம் செய்த தேசத்தில் கண்டவைகளை அவர்களை காட்டிலும் பெரியவைகளாக பார்த்தார்கள்.  வனாந்திரத்தில் அவர்களை நடத்திவந்த பெரிய தேவனை மறந்தார்கள்.  அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம், அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்,; இது அதினுடைய கனி.   ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்,; பட்டணங்கள் அரணிபபானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது,; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம். அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள், ஏத்தியரும், எப+சியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிரக்கிறார்கள், கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள். அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம், நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். அவனேடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது, அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம், நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம், நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.(எண் 13:27-33) இன்றைக்கு நாமும் அப்படித்தான் நம்மை நடத்துகிற பெரிய தேவனை மகிமை படுத்தி பேசாமல், சாத்தானில் வஞ்சனையில் விழுந்து அவனுடைய கிரியைகளை குறித்தே எப்பொழுது பேசிக்கொண்டிருக்கிறோம்.  தேவன் உனக்குள் பெரியவராய் வாசம் செய்வதால் நிச்சயமாய் உங்களால் சாத்தானை ஜெயிக்க முடியும்.   உங்கள் பிரச்சனைகளை நீங்கள் மேற்கொள்ள முடியும்.  எனவே அவர்களை ஜெயித்தீர்கள் என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது.  பிரியமானவர்களே, நம்முடைய தேவனை பெரியவராய் பாருங்கள், அவரையே உயர்த்துங்கள், தேவன் உங்கள் வாழ்க்கையில் செய்யும் பெரிய காரியங்களை காண்பீர்கள்.

கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை, நீரே பெரியவர், உமது நாமமே வல்லமையில் பெரியது. – எரேமியா 10:6

No comments:

Post a Comment