நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களில் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். – எபேசியர் 1:3
ஆசீர்வாதங்களை பல விதங்களில் நாம் பிரிக்கலாம். தேவன் கொடுக்கிற மகிமையான ஆசீர்வாதங்கள் உண்டு. இம்மைக்குரிய ஆசீர்வாதங்கள் உண்டு. மறுமைக்குரிய ஆசீர்வாதங்கள் உண்டு. உலக ஆசீர்வாதங்கள் உண்டு. ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் உண்டு. சாத்தான் காண்பிக்கிற ஆசீர்வாதங்கள் உண்டு. சாத்தான் இயேசு கிறிஸ்துவிடம் நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால் இந்த உலகத்தை உனக்கு தருவேன் எனறு சொன்னான். மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்(மத் 4:8-9). நீங்கள் எப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீ
உன்னதங்களில் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களில் ஒன்று பரிசுத்த ஆவியை பெறுவதாகும். என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்.(லூக்கா 24:49). ஆவிக்குரிய வாழ்க்கையில் பல நேரங்களில் சாத்தான் உங்களுக்கு விரோதமாய் கிரியை செய்யும் போது ஜெயம் பெற முடியாமல் தவிக்கிறீர்கள். பல நேரங்களில் தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள முடியாமல், உங்கள் காரியங்களில் என்ன முடிவு எடுப்பது என்று கேள்விகளோடு காணப்படுகிறீர்கள். அப்படிப்பட்ட நேரங்களில் உங்களுக்கு உதவி செய்ய பிரிசுத்த ஆவியானவர் உன்னதத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதமாக அருளப்பட்டுள்ளார். அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.(சகரியா 4:6). உன்னதங்களின் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களில் மேன்மையான ஆசீர்வாதம், நம்மை உன்னதங்களிலே அவரோடேகூட உட்கார செய்வதாகும். அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார், கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.(எபே 2:5-7). நீங்கள் எப்போதும் இயேசுவோடு இருக்க வேண்டுமானால் நீங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்
தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர், தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர். – சங்கீதம் 68:18
No comments:
Post a Comment