Thursday, 19 February 2015

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். – 1பேதுரு 5:7

விசுவாசிகளுடைய வாழ்க்கையை சோதனைக்கு உட்படுத்துகிற முக்கியமான ஒன்று கவலை.  நீங்கள் கவலைபடுவதினால் உங்கள் பிரச்சனைகளில் ஒரு மாற்றத்தையும் காணவே முடியாது.  கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? (மத் 6:27)  கவலை என்றால் என்ன? எப்பொழுது நீங்;கள் தேவனை மறந்து ஒரு காரியத்தை சிந்தக்கிறீர்களோ அதுவே கவலை.  உங்களுக்கு ஒரு காரியம் தேவை, இதற்கு யாரவது உங்களுக்கு உதவி செய்யவேண்டும்.  அப்பொழுது நீங்கள் யார் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று சிந்திக்கிறீர்கள்.  உங்களுக்கு கண்களுக்கு முன்பாக உங்களுக்கு தெரிந்த நபர்கள் எல்லாம் வருவார்கள், ஆனால் யாரும் உங்களுக்கு உதவி செய்யமாட்டார்கள்.  இந்த சூழ்நிலையில் தேவன் உங்களுக்கு உதவி செய்வார் என்பதை மறந்து. எனக்கு யாரும் உதவி செய்யவில்லையே என்று நீங்கள் கவலைபடுகிறீர்கள்.   கவலை என்பது விசுவாசத்திற்கு எதிரானது.  உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் விசுவாசத்தை விட்டு விலகும் போது கவலைபடுகிறீர்கள்.  இதற்கு இயேசு கிறிஸ்து ஒரு நல்ல எடுத்துக்காட்டை கொடுக்கிறார்.  ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத் 6:26)  உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள், அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை,   என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.  அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு  அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?(மத் 28:-30)

இங்கு இயேசு கிறிஸ்து தேவன் எப்படி ஆகாயத்துப் பட்சிகளை போஷிக்கிறார், காட்டுப் புஷ்பங்களை எப்படி வளர்க்கிறார், புல்லுகளுக்கு எப்படி உடுத்திவிக்கிறார் என்பதை குறித்து சொல்லுகிறார்.  ஆகாயத்து பறவைகளைக்காட்டிலும், காட்டு புஷ்பங்களை காட்டிலும், புல்லுகளை காட்டிலும் நீங்களே தேவனுடைய பார்வையில் உயர்ந்தவர்கள், விசேஷித்தவர்கள்.  அவர்களுக்காக தேவன் அக்கரை கௌ;வாரானால் உங்களுக்காக நிச்சியம் அக்கரை கொள்வார்.  இப்பொழுது நீங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் உங்கள் பிரச்சனைகள் எப்படிப்பட்ட அவசர பிரச்சனைகள் என்பதை தேவன் அறியவில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  உங்களை காட்டிலும் தேவன் உங்கள் மேல் மிகுந்த அக்கரை உள்ளவராய் இருக்கிறபடியினால் உங்களை விடுவிக்க மிகவும் தீவிரமாய் இருக்கிறார்.  கவவைபடுகிறவர்களை குறித்து தேவன் அற்பவிசுவாசிகளே என்று சொல்லுகிறார்.  இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக  நிச்சயமல்லவா?(லூக்கா 12:28)  அப்படியானல் விசுவாசிகளாகிய நீங்கள் ஒன்றுக்கும், ஒரு நாளும் கவலைபட கூடாது, கவலை என்பது விசுவாசிகளுக்கு வரவே கூடாது.  தேவனை அறியாதவர்கள் தான் கவலைபடுவார்கள்.  கவலை என்பது தேவன் என் தேவைகளை சந்திப்பாரா?  ஏனக்கு உதவி செய்வாரா என்று சந்தேகப்படும் போது வருகிறது.  ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள்கேளாமலும் சந்தேகப்படாமலும்  இருங்கள்.  இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள், இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.(லூக்கா 12:29-30) உங்களுக்கு இப்பொழுது என்ன தேவை என்பதை உங்கள் பிதாவாகிய தேவன் அறிந்திருக்கிறார்.  அதை குறித்து நீங்கள் சந்தேகப்படும் போது, யார் இதை செய்வார் என்று கவலைபடுகிறீர்கள்.  உலக ஜனங்களுக்கு தங்களுக்கு உதவி செய்ய யார் இருக்கிறார் என்று தெரியாது.  ஆனால் தேவனுடைய பிள்ளைகளாகிய உங்களுக்கு உதவி செய்ய பிதாவாகிய தேவன் இருக்கிறார் என்பதை நீங்;கள் அறிந்திருக்கிறீர்கள்.  எனவே எதை குறித்தம் கவலைபடாதிருங்கள்.  தேவனையே சார்ந்திருங்கள், அவர் உங்களுடைய எல்லா காரியங்களையும் பார்த்துக்கொள்வார்.

நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். – பிலிப்பியர் 4:6

No comments:

Post a Comment