Thursday, 26 February 2015

அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக்  கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். – மாற்கு 16:14

இங்கு இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தம் கடிந்து கொள்வதை பார்க்கிறோம்.  அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு, கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்.(மாற்கு 6:6) இந்த பகுதியில் தேவன் ஜனங்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார் என்று வேதம் சொல்லுகிறது.  அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.(மத் 13:58)  இயேசு கிறிஸ்து தாம் வளர்ந்த ஊரிலே ஜனங்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தம் அற்புதங்களை செய்யமுடியவில்லை.  உங்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் உங்கள் அவிசுவாசத்ததின் நிமித்தம் நீங்கள் அற்புதங்களை காண முடியவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?  தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கானான் தேசத்தை வாக்குத்தத்தமாக கொடுத்தார்.  ஆனால் எகிப்த்து தேசத்திலிருந்து புறப்பட்ட ஜனங்கள் அவர்களுடைய அவிசுவாசத்தின் நிமித்தம் கானான் தேசத்தில் பிரவேசிக்க முடியவில்லை.  மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா?அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே.   பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா?   ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.(எபி 3:17-19)   உங்கள் விசுவாசத்தின் அளவு எப்படி உள்ளது?  அவிசுவாசமாய் காணப்படுகிறீர்களா?  ஒரு வேளை மற்றவர்களை ஒப்பிடும்போது உங்களுடைய விசுவாசத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படலாம்.  அதை குறித்து கவலைப்படாதிருங்கள்.  ஒவ்வொரு மனுஷனுடைய விசுவாசத்தின் தொடக்கம் சிறிதாக தான் இருக்கும்.  இயேசு கிறிஸ்து உங்கள் விசுவாசவாசத்தை பெருக செய்ய வல்லராய் இருக்கிறார்.   பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.   நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன், நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.(லூக்கா 22:31-32)

உங்கள் வாழ்க்கையில் விசுவாசத்தை தேவன் தொடக்கிவிட்டார், நீங்களே அதை வளர செய்ய வேண்டும்.  ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்,(எபி 12:1)  உங்கள் விசுவாசம் பெருகுவதற்கு ஆதாரம் தேவைப்படுகிறது.  தேவனுடைய வார்த்தை உங்கள் விசுவாசம் வளருவதற்கான ஆதாரம்.  ஆதலால் விசுவாசம் கேள்வியினாலேவரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.(ரோமர் 10:17)  நீங்கள் விசுவாசத்தில் வளரவும், உங்கள் விசுவாசம் உறுதிப்படவும், நீங்;கள் தேவனுடைய வார்த்தையினால் போஷிக்கப்படவேண்டும்.  எனவே தேவனுடைய வார்த்தையை அனுதினமும் வாசியுங்கள், பேசுங்கள். நீங்கள் வாசித்த வேத வசனங்களை தியானம் செய்யுங்கள்.    உங்கள் விசுவாசம் உறுதியான விசுவாசமாய் காணப்பட உங்களுக்கு பயிற்சி அவசியம்.  விசுவாச பயிற்சி என்பது என்னவென்றால் நீங்கள் கேட்ட, வாசித்த வேத வசனத்தின்படி நீங்;கள செய்யவேண்டும்.  நீங்கள் கேட்ட வசனத்தின் படி உங்கள் வாழ்க்கையை அமைத்துகொள்ளாதபடியினால் நீங்;கள விசுவாசத்தில் வளர முடியவில்லை.  நீங்கள் எழுத்தின் படி தேவனுடைய வார்த்தை வாசிக்கும் போதும், கேட்க்கும் போதும் நம்புகிறீர்கள்.  ஆனால் அதை செயல்படுத்தும் போது உங்களுக்குள் சந்தேகம் வருகிறது.  அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.(மத் 4:4)  எனவே உங்கள் விசுவாசம் வளரவும், உறுதிப்படுத்தப்படவும் நீங்கள் தேவனுடைய வார்த்தையை வாசித்து, தியானித்து அதின்படி செய்யவேண்டும்.  அப்பொழுது நீங்கள் அற்புதங்களை காண்பீர்கள், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் குறித்த காலத்தில் நிறைவேறுவதை காண்பீர்கள்.

சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். – எபிரேயர் 3:12

No comments:

Post a Comment