Sunday, 22 March 2015

அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். – 1சாமுவேல் 30:19


தாவீதின் வாழ்க்கையில் ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் என்று கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது.  தாவீது ராஜாவிகிறதற்கு முன்பு அவனும் அவனோடு இருந்த மனுஷரும் சவுலுக்கு பயந்ததினால் மலைகளிலும் குன்றுகளிலும் ஒளிந்து கொண்டு வாழ்ந்தார்கள்.  அப்பொழுது தாவீது தன் மனைவி, பிள்ளைகலெல்லாம் இஸ்ரவேலின் எல்லை பகுதியான சிக்லாகு என்ற பட்டணத்தில் இருந்தார்கள்.  தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம்நாளிலே, சில்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சில்லாக்கின் மேலும் விழுந்து, சில்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,   அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய் விட்டார்கள். தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைப்பிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.(1சாமு 30:1-3).  சிறைபிடித்து கொண்டுபோகப்பட்ட தன் மனைவி, பிள்ளைகளின் நிமித்தம் தாவீது மிகவும் சத்தமிட்டு அழுதான்.  இப்பொழுது தாவீது தனக்குள்ள எல்லாவற்றையும் இழந்தவனாய் காணப்பட்டான்.  இந்த வேலையில் அவனோடு உண்மையும் உத்தமமாய் இருந்து அவனை பின்பற்றி வந்த அவனோடு இருந்தவர்கள் அவனுக்கு விரோதமாய் எழும்பினார்கள்.  தாவீதை ஒரு எதிரியை போல பாவித்து அவனை கொலை செய்ய நினைத்தார்கள்.  தாவீது மிகவும் நெருக்கப்பட்டான், சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள், தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.(1சாழு 30:6).  பிரியமானவர்களே, தாவீதின் நிலைமையை பாருங்கள், எல்லாவற்றையும் இழந்தவனாய், எல்லோராலும் பகைக்கப்பட்டவனாய் காணப்பட்டான்.  தாவீதின் சூழ்நிலையை போல உங்களுடைய சூழ்நிலையும் காணப்படுகிறதா?  தாவீது இழந்து போன ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் திரும்பபெற்றுக்கொண்டது போல நீங்களுடம் பெற்றுக்கொள்வீர்கள்.


இழந்து போனதை பெற்றுகொள்ள தாவீத செய்தது என்ன?  தாவீது தன்னுடைய சூழ்நிலையின் மத்தியில் தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.  தாவீது மிகவும் நெருக்கப்பட்டான், சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள், தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.(1சாமு 30:6).   தாவீது தேவசமுகத்தின் தன் நடைகளை சீர்தூக்கிப் பார்த்தான்.  தான் என்ன நிலையில் எல்லாவற்றையும் இழந்தது என்பதை கண்டு கொண்டான்.  இழந்துபோனதை இரட்சிக்க வந்த தேவன் தன்னோடு இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டான்.  இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.(லூக்கா 19:10).  தாவீது போல நீங்களும் கர்த்தருக்குள் உங்களை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.  நீங்கள் இழந்து போன காரியங்களையே நினைத்து கலங்காதிருங்கள்.  நீங்கள் இழந்து போனதை குறைவுபடாமல் கொடுக்கிற தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஏன் இந்த சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தது என்பதை அறிந்து கெண்டு தேவனுடைய சழுகத்தை நாடுங்கள்.  தேவனுடைய சித்தமில்லாமல், அவருடைய அனுமதியில்லாம் என்னுடைய வாழ்க்கையில் ஒன்றும் நடக்காது என்பதை அறிக்கை செய்யுங்கள்.  எத்தனை இழப்புகள் வந்தாலும், எத்தனை தீமைகள் வந்தாலும் அவை எல்லாவற்றையும் நன்மையாக மற்ற வல்லமையுள்ளவர் நம் தேவன் என்பதை வெளிப்படுத்துங்கள்.  தேவன் தாவீதுக்கு ஆலோசனை சொல்லி ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டது போல உங்கள் வாழ்க்கையிலும் பெற்றுக்கொள்வீர்கள்.  தேவனுடைய சமுகத்தில் அவருடைய ஆலோசனைக்காகவும், அவருடைய சித்தத்திற்காகவும் காத்திருங்கள்.  தாவீது கர்த்தரை நோக்கி;: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர், அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக் கொள்வாய் என்றார்.(1சாமு 30:8). 

என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.   என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள், கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். – சஙகீதம்; 18:17-18

No comments:

Post a Comment