அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு
பக்திவைராக்கியமாயிருந்தேன், இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத்
தள்ளிவிட்டார்கள், உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய
தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம்
மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். –
1இராஜாக்கள் 19:14
எலியா ஒரு மிகப்பெரிய தீர்க்கதரிசி. கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தவர். நம்மைபோல பாடுள்ளமனுஷனாய் இருந்து அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தவர். எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.(யாக் 5:17-18) ஆனால் அவருடைய வாழ்க்கையிலும் சோர்வு வந்தது. வைராக்கியமாய் இருந்தவர் இப்போது சோர்ந்து போய் ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான். அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம்போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும், நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்,(1இரா 19:4-5). இது எதை குறிக்கிறது என்றால், தேவனுடைய காரியங்களில், ஆவிக்குரிய வளர்ச்சியில், தேவனுக்காக எதையும் செய்வதில் உற்சாகமாக இருந்து எலியா இப்பொழுது அனைத்தையும் இழந்து நித்திரைபண்ணுகிறார். எலியாவை போல நீங்களும் உங்களுடைய ஆவிக்குரிய காரியங்களில், உங்கள் சபை காரியங்களில், உங்கள் ஜெப வாழ்க்கையில் உற்சாகம் இழந்து போய் வெதுவெதுப்பாய் காணப்படுகிறீர்களா? இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் இழந்து போனதை திருப்ப கொடுக்கும்படியாய், தேவன் உங்களோடு பேசுகிறார். நாம் ஆராதிக்கும் தேவன் இழந்து போனதை திருப்பி கொடுக்கிறவர். இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.(லூக்கா 19:10) அவரை நோக்கி இப்பொழுதே கூப்பிடுங்கள். உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.(சங் 51:12)
எலியா ஏன் தன்னுடைய உற்சாகத்தை இழந்தார். யேசபேல் எலியாவை கொலை செய்ய வகைதேடுகிறாள் என்ற செய்தியை அறிந்த அவர் சோர்ந்து போனார். எலியாவுக்கு தன்னுடைய ஜுவனை குறித்த பயம் வந்தபோது சோர்ந்து போனார். தன் ஜுவனை காக்கிற தேவன் அவரோடு இருக்கிறார் என்பதை மறந்துவிட்டார். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிப+ரணப்படவும் வந்தேன்.(யோ 10:10). இது வரை உற்சாகமாய் காணப்பட்ட நீங்கள் ஏன் இன்றைக்கு சோர்ந்துபோய் காணப்படுகிறீர்கள். தேவன் உங்களுக்கு கொடுத்த சந்தோஷத்தையும் சமாதானத்தையும், நீங்கள் இழந்து, சோர்ந்து போகும்படி சாத்தான் தந்திரமாய் கிரியை செய்கிறான். தேவன் கொடுத்த உற்சாகத்தை எடுத்துப்போடும்படி உங்களை உலகத்துக்கும், பாவத்திற்கும் அடிமைபடுத்துகிறான். எனவே அசுத்தமான இந்த உலகத்திலே நீங்கள் பாவம் செய்ய தூண்டப்படுகிறீர்கள். இதனிமித்தம் ஒவ்வொன்றாக நீங்கள் இழந்து போகிறீர்கள். உற்சாகத்தை இழந்து போன எலியாவை மீண்டும் எழும்பும்படி தேவன் தம்முடைய தூதனை அனுப்பினார். ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான், அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது, அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப்படுத்துக்கொண்டான். கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு, நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான். அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான்.(1இரா 19:5-8). இன்றைக்கு உங்களை உயிர்ப்பிக்கும்படி தேவனே தம்முடைய வார்த்தையின் மூலம் உங்களோடு பேசுகிறார். இப்பொழுதே நீங்கள் உயிர்ப்பிக்கப்படுகிறீர்கள், நீங்கள் இழந்து போன அனைத்தையும் இன்றைக்கே பெற்றுக்கொள்வீர்கள், தொடர்ந்து தேவனுக்காக உற்சாகமாய் வாழ்வீர்கள்.
சோர்ந்துபோகிறவனுக்கு அவர்பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். – ஏசாயா 40:29

No comments:
Post a Comment