Wednesday, 13 November 2013





உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். – சங்கீதம் 37:5


தேவன் உங்கள் காரியங்களை வாய்க்கச்செய்வார். நான் எந்த காரியத்தை தொடங்கினாலும், அதை நல்ல முறையில் செய்ய முயற்சி செய்தாலும் அந்த காரியம் வாய்க்கவில்லையே என்று கவலைப்படுகிறீர்கள். உங்களுடைய பிள்ளையின் திருமணம் நடைபெற எத்தனையோ முயற்சிகளை செய்து வருகிறேன் ஆனால் ஒன்றும் நடக்கவி;லலை. உங்கள் வேலையிலும், விபாரத்திலும் எத்தனையோ முயற்சிகளை செய்து வருகிறேன் ஆனால் வாய்க்கவில்லை என்று மனம் சோர்ந்து போன நிலைமையில் காணப்படுகிறீர்கள். தேவன் உங்களுக்கு சொல்லும் வார்த்தை, உன் வழியைக் என்னிடத்தில் ஒப்புவித்து, என் மேல் நம்பிக்கையாயிரு, நான் காரியத்தை வாய்க்கப்பண்ணுவேன். பிரியமானவர்களே! நீங்கள்; எந்த காரியத்தை உங்கள் வாழ்கையில் முயற்சி செய்தாலும், முதலில் அதை தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து அவர் அதை ஆசீர்வாதமாக மாற்றித் தரும்படியாய் அவரிடத்தில் ஒப்புக்கொடுங்கள். அப்பொழுது அந்த காரியம் வாய்ப்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் உங்கள் காரியங்களை அவருடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கும் போது தேவன் அதை வாய்க்கச் செய்யும்படியாய் பொறுப்பெடுக்கிறார். அப்பொழுது தேவன் உங்களோடு இருப்பதை காண்பீர்கள். தேவன் உங்களோடு இருக்கும் போது ஒரு மனுஷனும் உங்கள் காரியங்களை தடுக்க முடியாது. கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை. (ஆதி 39:23). யோசேப்போடு கர்த்தர் இருந்தபடியினால் அவன் செய்த காரியங்கள் வாய்த்தது. இன்றைக்கு கர்த்தர் உங்களோடு இருக்கிறார் என்பதை நீங்கள் உறுதியாய் சொல்ல முடியுமா? உங்கள் வாழ்கையில் தேவனை மறந்து நீங்களே எல்லா காரியங்களையும் நடத்துகிற படியினால் நீங்கள் சோர்ந்து போகிறீர்கள். இன்றைக்கே தேவ சமுகத்தில் உங்களை ஒப்புக்கொடுத்து அவர் உங்களோடு இருந்து நடத்தும்படியாய் விட்டுக்கொடுங்கள். நீங்கள் எல்லாவற்றிலேயும் ஆசீர்வாதங்களை காண்பீர்கள். இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. (ஏசா 48:17). கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார், நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். (ஏசா 58:11).



தேவனிடத்தில் தன் காரியங்களை ஒப்புக்கொடுக்கிறவன் எதையும் தேவ சித்தத்தின்படியே செய்வான். நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள், கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான், அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்? நான், நானே அதைச் சொன்னேன், நான் அவனை அழைத்தேன், நான் அவனை வரப்பண்ணினேன், அவன் வழி வாய்க்கும். (ஏசா 48:14,15). இங்கு தேவன் அவன் வழி வாய்க்கும் என்று தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்களை குறித்து சொல்லுகிறார். ஆம் நீங்கள் தேவனுடைய கரத்தில் உங்கள் காரியங்களை ஒப்புக்கொடுக் கொடுக்கும் போது, உங்களுக்கு பிரியமான வழிகளிலே எதையும் செய்யக்கூடாது. தேவனிடத்தில் உங்கள் காரியங்களை ஒப்புகொடுத்த பின்பு, தேவனுடைய ஆலோசனைக்காக காத்திருங்கள். நீங்கள் அவருடைய ஆலேசனைக்காக காத்திருக்கும் போது, தேவன் உங்களோடு பேசுவார். தேவன் கொடுக்கும் ஆலோசனையின் படி நடக்கும் போது எல்லா வழிகளிலும் காரியங்கள் வாய்ப்பதை காண்பீர்கள். உசியா ராஜாவின் நாட்களில் அவன் எப்பொழுதெல்லாம் தேவனை தேடினானோ அப்பொழுதெல்லாம் அவன் காரியம் வாய்த்தது. தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான், அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார். (2நாளா 26:5). நீங்கள் தேவனை தேடுகிறீர்களா அல்லது மனுஷனை தேடி போகிறீர்களா? நீங்;கள் தேவனை தேடுகிறவர்களாக இருந்தால் உங்களுக்கு குறைவு இருக்காது, சந்தோஷமான வாழ்க்கையை வாழ்வீர்கள் எப்பொழுதும் தேவனை மகிமைபடுத்துவீர்கள். சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும், கர்த்தihத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. (சங் 34:10). உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக, உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. (சங் 40:16). இன்றைக்கு தேவனை தேடுங்கள் நிச்சயமாய் உங்கள் காரியங்கள் வாய்க்கும்.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். - சங்கீதம் 37:4.

No comments:

Post a Comment