Wednesday, 13 November 2013





பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான், அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள், அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும், சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார். - எரேமியா 51:56.

தேவன் இன்றைய தியானத்தில் உங்களுக்கு சொல்லுகிற வார்த்தை, உங்களுக்கு நிச்சயமாக பதில் அளிப்பேன் என்பதாகும். ஆம் நீங்கள் வெகு நாட்களாய் தேவனிடத்தில் பல காரியங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள். தேவன் இன்றைக்கு என் காரியங்களை வாய்க்கச்செய்யமாட்டாரா? இன்றைக்கு என் வாழ்க்கை மாறாதா? இன்றைக்கு எனக்கு பதில் கிடைக்காதா என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள். இன்று உங்களுக்கு நிச்சயமாக பதில் அளிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.(எரே 29:11) ஒவ்வொரு நாளும் கண்ணீரோடு நீங்கள் ஜெபித்த ஜெபங்களுக்கு கெம்பீரமான பதிலை பெற்றுக்கொள்ள போகிறீர்கள். என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர், என் கண்ணீih உம்முடைய துருத்தியில் வையும், அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?(சங் 56:8). நீங்கள் விட்ட கண்ணீர்கள் வீனாகவில்லை அவைகள் அனைத்தும் தேவனுடைய கணக்கில் இருக்கிறது. உனக்கு கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார். இன்றைக்கு கர்த்தருடைய வார்த்தையை விசுவாசியுங்கள் அவர் உங்களுக்கு ஒருபோதும் தீமை செய்யமாட்டார். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?(மத் 7:9-11). நன்மையினால் உன் வாயைத்திருப்தியாக்குகிறார், கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.(சங் 103:5).


அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, (1சாமு 1:10). அன்னாள் ஒவ்வொரு வருஷமும் தேவசமுகத்திற்கு வருபோதெல்லாம் கர்த்தர் தனக்கு ஒரு குழந்தையை கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபிப்பது வழக்கம். அனேக வருடங்களாக ஜெபித்தும் பலன் கிடைக்காதது கண்டு, ஒரு நாள் தேவ சமுகத்தில் தன் இருதயத்தை ஊற்றி மிகுந்த கண்ணீரோடு ஜெபித்தாள். அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரி. நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை. நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.(1சாமு 1:15). தேவன் அன்னாளின்; கண்ணீரை கண்டார். தேவன் அன்னாளை மறந்துவிட வில்லை, அவர் கண்ணீர் ஜெபத்திற்கு பதில் கொடுத்தாh. அதற்கு ஏலி சமாதானத்துடனே போ. நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கக்கடவது என்றாள். பின்பு அந்த ஸ்திரி புறப்பட்டுப்போய் போசனஞ் செய்தாள். அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.(1சாமு 1:17-18). அன்னாளில் கண்ணீர் ஜெபத்திற்கு பதில் கொடுத்த தேவன், உங்கள்; கண்ணீரையும் காண்கிறபடியினால் உங்களுக்கும் நிச்சயமாய் பதில் கொடுப்பார். உங்களுடைய பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரு முடிவு உண்டு, இன்றைக்கு தேவன் உங்களுக்கு பதில் கொடுக்கப் போகிறார். ஆன்னாளை போல உங்கள் இருதயத்தில் உள்ளதை தேவ சமூகத்தில் ஊற்றிவிடுங்கள். ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.(சங் 20:1).

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். - எரேமியா 33:3.

No comments:

Post a Comment