அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார். நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும். தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான். – ஆதியாகமம் 28:20-22.
உங்கள் வாழ்கையில் எத்தனை முறை தேவனுடைய ஒத்தாசை இல்லாமல் உங்களுடைய சொந்த பெலத்தினாலும், சொந்த முயற்சியினாலும் காரியங்களை சாதிப்பதில் கவனமாய் இருந்திருக்கிறீர்கள். அப்படிப்பட்ட வேலைகளில் நீங்கள் எப்பொழுது தோல்விகளையே சந்தித்திருக்கிறீர்கள். பின்பு உங்களால் முடியாது என்று தேவனிடத்தில் சேருகிறீர்கள். அப்படி தோல்விகளோடு நீங்கள் தேவனிடத்தில் வரும்போது தேவன உங்கள் விண்ணப்பங்களை அங்கிகரிக்கும் படியாய் பொருத்தனைகளை செய்து ஜெபிக்கிறீர்கள். இங்கு யாக்கோபு தேவனிடத்தில் பொருத்தனை செய்து ஜெபிக்கிறதை வாசிக்கிறோம். யாக்கோபு தன்னுடைய பெற்றோர்களை விட்டு தன் சகோதரனாகிய ஏசாவிற்கு பயந்து தனிமையாய் விடப்பட்டவனாய் தன் எதிர்காலத்தை குறிதத கேள்விகளோடு வனாந்திரத்தில் சென்றுகொண்டிருக்கிறான். அவன் எதிர் காலத்தை குறித்த சிந்தனையோடு தூங்கிய போது போது தேவன் அவனுக்கு சொப்பனத்தில் தரிசமானர். அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான். அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. (ஆதி 28:18-19). இது வரை ஒருவரின் துணையில்லாமல் இருந்த யாக்கோபு தேவனை தரிசித்து தேவனிடத்தில் பொருத்தனை செய்து ஜெபித்தான். அவனுடைய பொருத்தனையை தேவன் ஏற்றுக்கொண்டார். இந்த பொருத்தனை ஜெபத்தை கூர்ந்து கவனித்தால், யாக்கோபு தன்னுடைய வாழ்கையின் ஒவ்வொரு காரியத்திற்கும் தேவனையே சார்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடியும். யுhக்கோபு தேவன் தன்னோடு இருக்க வேண்டும், அவனுடைய வாழ்கையில் ஒவ்வொரு சிறிய காரியங்கள் முதற்கொண்டு தேவன் கொடுக்கவேண்டும். தனக்கு தேவையான உணவு, உடை, வஸ்திரம் அனைத்திற்கும் தேவனையே சார்ந்து கொண்டான். தேவன் தன்னை பாதுகாக்க வேண்டும் என்று ஜெபித்தான். பிரியமானவர்களே உங்கள் வாழ்கையிலும் அனைத்து காரியங்களுக்காகவும் தேவனையே சார்ந்துகொள்ளுங்கள். அவர் உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை, உங்களை மறப்பதில்லை. யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை, நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன், நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. (ஏசா 44:21). ஆண்டவர் என்றென்றைக்கும் கை விடமாட்டார்.(புலம்பல் 3:31).
யாக்கோபு தேவனிடத்தில் முற்றிலும் சார்ந்து கொண்டதினால் அவன் வாழ்க்கையில் சிறிய கரியம் முதல், பெரிய காரியங்கள் வரையும் தேவனே ஆசீர்வதித்தார், அவன் கேட்ட அனைத்தையும் தேவன் கொடுத்தார். எனவே யாக்கோபு தான் பெற்ற ஆசீர்வாதங்களை குறித்து சொல்லும் போது அவைகளை தேவனே கொடுத்தார் என்று அறிக்கை செய்தான். பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன். இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.(ஆதி 32:9-10). நீங்கள் உங்களுக்கு பெரிதாக தோன்றும் காரியங்களை மட்டும் தேவனிடத்திடத்தில் கொண்டுவருகிறீர்கள். யாக்கோயை போல தேவனிடத்தில் சகலத்தையும் ஒப்புகொடுத்து, பொருத்தனை செய்து ஜெபிக்கும் போது தேவன் அவைகளை அங்கிகரித்து உங்களை ஆசீர்வதிக்கிறார். கொடுக்கிறார். ஆனால் நீங்கள் செய்த பொருத்தனையில் உண்மையாய் இருக்க வேண்டும். நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே, அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம்.(பிர 5:4-5). உங்களுடைய வாழ்க்கையில் தேவனிடத்தில் உங்களை முற்றிலும் ஒப்புவித்திருக்கிறீர்களா? நீங்கள் செய்த பொருத்தனைகளை நிறைவேற்றிவிட்டீர்களா? தேவன் உங்களுக்கு உதவி செய்யும்படியாய், தினமும் சில மணி நேரம் ஜெபத்திலும், வேதவாசிப்பிலும் செலவிடுவேன் என்று செய்த பொருத்தனைகளை நிறைவேற்றினீர்களா? தேவன் உனக்கு நன்மை செய்யும்படியாய் உபவாசிப்பேன், கர்த்தருடைய ஊழியத்திற்கு தசமபாகங்களையும், காணிக்கைகளையும் கொடுப்பேன் என்று செய்த பொருத்தனைகளை நிறைவேற்றினாயா? இன்றைக்கு செய்த பொருத்தனைகளை நிறைவேற்றுங்கள் யாக்கோபைபோல நீங்களும் ஆசீவதிக்கப்படுவீர்கள்.
நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி, ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். - சங்கீதம் 50:14-15.
No comments:
Post a Comment