மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். – வெளிப்படுத்தின விசேஷம் 12:11
இந்த உலகத்தில் நமக்கு விரோதமாய் போராடுகிற முக்கிய சத்துரு சாத்தான். தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்கள் சாத்தானின் மேல் ஜெயங்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் சாத்தானை ஜெயிக்கும்படியாய் தேவன் தம்முடைய வார்த்தையும், அதிகாரத்தையும் உங்களுக்கு கொடுத்திருக்கிறாh. சாத்தான் மிகவும் தந்திரமானவன். அவன் எப்பொழுதும் தன்னை வல்லமையுள்ளவனாகவே காண்பிப்பான். சாத்தானை நீங்கள ஜெயிக்கவேண்டுமானால் அவன் ஏற்கனவே சிலுவையில் தோற்றுப்போனவன் என்பதை நீங்கள் அறிந்து விசுவாசிக்க வேண்டும். சாத்தானுடைய முக்கியமான தந்திரங்களில் ஒன்று சோதிப்பதாகும். எனவே வேதம் அவனை சோதனைக்காரன் என்று அழைக்கிறது (மத் 4:3). சோதனைக்காரன் உங்களுடைய வாழ்க்கையில் போராட்டங்களையும், இழப்பகளையும், சந்தேகங்களையும், பிரிவினைகளையும் கொண்டு வருகிறான். அவன் உங்களை சோதிப்பதின் நோக்கம், அதின் மூலம் உங்களை எப்படியாவது தேவனிடத்திலிருந்து பிரிப்பதாகும். கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறொந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். (ரோமர் 8;:36-39) தேவனுடைய பிரசன்னத்தையும், தேவனுடைய அன்பைவிட்டு உங்களை பிரிக்கும்படியாய் உங்கள் வாழ்க்கையில் சோதனைகளை கொண்டுவந்து அதனை தேவன் தான் கொண்டுவருகிறார் என்று உங்களை நம்பச்செய்கிறான். பிரியமானவர்களே! உங்கள் வாழ்க்கையில் தேவன் ஒருபோதும் சேதனைகளை கொண்டுவருகிறவர் அல்ல. அவர் சோதிக்கப்படுகிற உங்களுக்கு ஜெயத்தை கொடுக்கிறவர். சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக, தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். (யாக் 1:13-16).
இன்று அநேகர் சோதனைகாரனாகிய சாத்தான் கொண்டு வரும் கண்ணிகளில் சிக்கிக் கொள்கிறார்கள். அவன் கொண்டுவரும் சோதனைகளால் நீங்கள் சமாதானமின்றி காணப்படுகிறீர்கள். கடன்பிரச்சனையிலிருந்து விடுதலை பெறமுடியாமல் தவிக்கிறீர்கள். குடும்பத்தில் பிரிவினைகளும், பிரச்சனைகளும் உங்களை அழுத்துகிறது. பல கெட்ட பழக்கங்களிலிருந்து விடுதலை பெற முடியாமல் காணப்படுகிறீர்கள், ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேற்றமும் ஜெயமும் காணப்படவில்லை. இன்றைக்கு தேவன் உங்களுக்கு சாத்தானுடைய சகல தந்தரத்திலிருந்து ஜெயத்தை தருவேன் என்று சொல்லுகிறார். ஆம் தேவன் உனக்காக சிலுவையில் தம்முடைய இரத்தத்தை சிந்தி சாத்தானை ஜெயித்துவிட்டபடியினால், அந்த ஜெயம் உனக்கும் சொந்தமாகிறது. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிN;ல வெற்றிசிறந்தார்.(கொலோ 2:14-15). தேவன் வல்லமையுள்ள தம்முடைய வார்த்தையை உங்களுக்கு பட்டயமாக கொடுத்திருக்கிறார். தேவனுடைய வார்த்தை உங்களுக்குள் நிலைத்திருக்கும் போது நீங்கள் சாத்தானை ஜெயிக்கமுடியும். ஜெயம் கர்த்தருடையதாய் இருந்தாலும் அந்த ஜெயத்தை தேவன் தம்முடைய வார்த்தையை நீங்கள் பயன்படுத்தும் போது நீங்கள் ஜெயத்தை பெற்றுக்கொள்ள முடியும். உங்கள் வாழ்கையில் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாதபடியினால் அவருடைய வார்த்தையில் நீங்கள் நிலைத்திருக்க முடியவில்லை, உங்களால் சாத்தானை ஜெயிக்க முடியவில்லை. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.(யாக் 4:7). தேவனுடைய வார்;த்தைக்கு கீழ்படிந்து அவருடைய வார்த்தைகள் உங்கள் வாழ்கையில் நிறைவேறும் போது நீங்கள் சாத்தானை மிக எளிதில் ஜெயிக்கிறீர்கள். ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.(யாக் 1:21-22).
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். - ரோமர் 16:20
No comments:
Post a Comment