Wednesday, 13 November 2013





தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். - யோபு 42:2.


உங்கள் வாழ்க்கையில் உங்கள் காரியங்கள் வாய்க்காம்ல போகும் போது நீங்கள் சொல்லும் காரணங்களில் ஒன்று தடைகள். திருமணம் குறித்த வயதில் நடைபெறாத காரணம் தடைகள் என்று சொல்லுகிறீர்கள். வீடு கட்டி முடிக்காத படி தடைகள் காணப்படுகிறது என்று சொல்லுகிறீர்கள். வேலை கிடைக்கவில்லை தடைகள் காணப்படுகிறது என்று சொல்லுகிறீர்கள். தேவனுடைய வார்த்தைகள் நிறைவேறாமல் போனதற்கு தடைகள் தான் காரணம் என்று சொல்லுகிறீர்கள். பிரியமானவர்களே கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது தேவன் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது. நான், நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன், உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன்இல்லை, நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாள் உண்டாகாததற்குமுன்னும் நானே இருக்கிறேன், என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை, நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? (ஏசா 43:11-13). அநேகம் பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான். (1சாமு 14:6). சவுலின் நாட்களில் பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் வந்தார்கள். அப்பொழுது அவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள் போருக்காக தங்கள் ஆயுதங்களை கூர்மையாக்காதபடி கொல்லர்கள் ஒருவரையும் பெலிஸ்தியர்கள் அனுமதிக்கவில்லை. இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியிருந்தது. (1சாமு 13:20). யுத்தநாள் வந்த போது சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது. பெலிஸ்தியர்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கு விரோதமாய் பாளயம் இறங்கி பரம்பியிருந்தார்கள். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் போர் செய்ய ஆயுதம் இல்லை. இஸ்ரவேல் ஜனங்களைப்போல நீங்களும் போராயுதங்கள் இல்லாமல் காணப்படலாம். உங்கள் ஆயுதமாகிய ஜெப ஜீவியம் குன்றின நிiமையில், அனலாய் இல்லதாத படியினால் சாத்தான் உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து தடைகளை கொண்டுவருகிறான். இன்றைக்கு கர்த்தருடைய வார்த்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்படி, நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும்படி ஜெபத்தில் உறுதியாய் தரித்திருங்கள். எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக் கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவ பலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.(2கொரி 10:4-5).




ஆபிரகாம் மூலம் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு வாக்குத்தத்தங்கள் செய்தார். அந்த வாக்குத்தத்தம் நிறைவேற்றும்படியாய் அவர்களுடைய ஜெபம் எல்லா தடைகளையும் நீக்கியது. சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தான் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார். தேவன் அவர்களை நினைத்தருளினார்.(யாத் 2:23-25). இங்கு பெருமூச்சு என்பது நீங்ள் பரிசுத்த ஆவியானவரோடு இணைந்து ஜெபிக்கும் ஜெபத்தைக்குறிக்கிறது. இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவர் வாக்குக்கடங்காத பெருமூச்சோடு உங்களுக்காக வேண்டுதல் செய்கிறார். பல நேரங்களில் நீங்கள் சோர்வடைந்து காணப்படுகிறபடியினால் ஜெபிக்க முடியவில்லை. உங்களுடைய வாழ்க்கையில் காணப்படும் பிரச்சனையின் நிமித்தமாய் உங்களால் ஜெபிக்க முடியவில்லை. ஆனால் ஆவியானவர் ஒருபோதும் சோர்ந்து போகிறவர் அல்ல உங்களுக்காக பரிந்து பேசுகிறவர், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறவர். அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டிய தின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்.(ரோ 8:26) பிரியமானவர்களே, நீங்கள் ஆவியானவரோடு இணைந்து ஜெபிக்கும் போது, சோர்ந்து போக மாட்டீர்கள். உங்கள் ஜெபத்திற்கு உடனே பதில் வருவதை காண்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் இது வரை இருந்த தடைகள் , நீங்கள் ஆவியானவரோடு இணைந்து ஜெபிக்கும் போது, நீங்குவதை காண்பீர்கள். கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார், இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோihயும் சிறியோihயும் ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். வானத்தையும் ப+மியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். (சங்கீதம் 115:12-15).


தடைகளை நீக்கிப் போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார். அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்து போவார்கள். அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார் கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்து போவார். - மீகா 2:13

No comments:

Post a Comment