பரலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பரலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். – மத்தேயு 18:18
இந்த கடைசி காலத்தில் தேவனுடைய பிள்ளைகள் தேவன் கொடுத்துள்ள ஆவிக்குரிய அதிகாரங்களை அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். எனவே பல நேரங்களில் என்னுடைய வாழ்ககையை குறித்து என் தலையில் கையை வைத்து யாராவது சொல்லமாட்டார்களா என்று ஒடி அளைகிறார்கள். ஆனாபடியினால் அவர்கள் தேவ சமூகத்தில் ஜெபத்திலும் தியானத்திலும் காத்திருப்பதில்லை. உங்களுக்கு தேவன் கொடுத்த அதிகாரங்களை நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
இயேசு கிறிஸ்து மரணத்தை ஜெயித்து உயிர்தெழுந்த பின்பு தன்னுடைய சீஷர்களை பார்த்து சொன்ன வார்த்தை, அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பரமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.(மத் 28:18). தேவன் இந்த அதிகாரத்தைத்தான் தம்முடைய பிள்ளைகளாகிய நமக்கு கொடுத்திருக்கிறார். தேவன் உங்களுக்கு கொடுத்துள்ள அதிகாரத்தில் ஒன்று கட்டவிழ்க்கும் அதிகாரம், மற்றென்று கட்டும் அதிகாரம். நமக்கு தேவன் கொடுத்துள்ள அதிகாரம் பல நேரங்களில் நமக்கு தெரியாமல் போய்விடுகிறது. இதை நாம் அறிந்து கொண்டு விசுவாசத்தோடு நம்முடைய வாழ்க்கையில் பயன்படுத்தும் போது நாம் இந்த வாக்குத்தத்தங்கள் நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறுவதை பார்க்க முடியும்.
தேவன் நமக்கு வாக்குத்தத்தமாக கொடுத்த முதல் அதிகாரத்தை குறித்து சிறிது பார்க்கப்போகிறோம். இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.(லூக்கா 13:16). இங்கு ஒரு ஸ்திரீ சாத்தானால் 18 வருடமாக கட்டப்பட்டிருக்கிறாள். இந்த ஆவி பெவீனப்படுத்துகிற ஆவி. இன்றைக்கு சாத்தான் பலரை இந்த பெலவீனப்படுத்துகிற ஆவியினால் கட்டியிருக்கிறான். தேவனுடைய ஆசீர்வாதங்களை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளாதபடி பிசாசு உங்களை பெவீனப்படுத்துகிறான். சிலருக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனையை கொடுத்து பெலவீனப்படுத்துகிறான். சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பாவத்திலிருந்து அவர்கள் விடுதலை பெறமுடியாதபடி அவர்களை பெலவீனப்படுத்துகிறான். சிலநேரங்களில் தேவனை காட்டிலும் பிரச்சனைகளை பெரிதாக காட்டி பெலவீனப்படுத்துகிறார். பிரியமானவர்களே, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இது என் பெலவீனம் என்று சொல்லி சோர்ந்து போகிறீர்களா? தேவன் இன்றைக்கு உங்களுக்க கொடுத்துள்ள இந்த அதிகாரத்தை பயன்படுத்துங்கள். உங்களை பெலவீனத்தில் கட்டியிருக்கும் ஆவியை இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள் நாமத்தினால் கட்டுகளை அவிழ்ததிடுங்கள். உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள், பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.(யோவேல் 3:10)
ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும், அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.(சங் 51:15) நீங்கள் அடுத்து பயன்படுத்தவேண்டிய அதிகாரம் உதடுகளை திறக்கும் அதிகாரம். இன்றைக்கு அநேகருடைய உதடுகள் கட்டப்பட்டிருக்கிறது. தேவனுடைய மகத்துவத்தை வாயினால் சொல்லமுடியாதபடி உங்கள் உதடுகள் கட்டப்பட்டிருக்கிறது. தேவன் செய்த நன்மைகளை சாட்சியாக சொல்லாதபடி உங்கள் உதடுகள் கட்டப்பட்டிருக்கிறது. தேவனை விடுதலையாய் துதிக்கமுடியாதபடி சிலருடைய உதடுகள் கட்டப்பட்டிருக்கிறது. இன்றைக்கு பலர் ஆராதனை வேலைகளில் ஆராதனையை நடத்துபவர்கள் பாடுவார்கள் நாம் ஏன் பாடவேண்டும் என்று அமைதியாக தேவனை அராதிப்பார்கள். உங்கள் ஆராதனை வேலையில் மிக முக்கிய பகுதி தேவனை துதித்து பாடுவாதாகும் இன்றைக்கு அப்படிப்பட்ட நாவுகள் இயேசுவின் நாமத்தில் திறக்கப்படுவதாக.
நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.(ரோமர் 10:10) விசுவாசமான வார்த்தைகளை பேச நம்முடைய வாய்கள் திறக்கப்பட வேண்டும். விசுவாசமான வார்த்தைகள் என்பது கண்டவைகளை பேசுவது அல்ல, காணதவைகளை விசுவாசித்து பேச வேண்டும். இன்றைக்கு தேவனுடைய பிள்ளைகளில் தேவன் ஒரு அற்புதமான காரியத்தை உங்கள் வாழ்க்கையில் செய்வார் என்று சொன்னால், உடனே அதை விசுவாசிப்பதில்லை. உடனே இது எப்படி ஆகும், இது எப்படி நடக்கும்? என்று சந்தேகத்துடன் பேசுகிறார்கள். தேவன் உங்களுக்கு அதிகாரத்தை கொடுத்திருக்கிறார், நீங்கள் எவைகள் நடக்கும் என்று விசுவாசித்து உங்கள் வாயினால் அறிக்கை செய்கிறீர்களோ அது அப்படியே நடக்கும். சூழ்நிலைக்கு தகுந்தபடி பேசாமல், தேவன் என் வாழ்க்கையில் இதை செய்வார் என்று உங்களுக்கு தேவன் கொடுத்துள்ள அதிகாரத்தை மனதில் கொண்டு விசுவாச வார்த்தைகளை அறிக்கை செய்யுங்கள்.
வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன், நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.(ஏசா 45:4). இன்றைக்கு விசுவாசிகள் பாதிக்கப்பட்டு சோர்ந்து போகிற முக்கியமான தடை பொருளாதார தடைகள். இவை விசுவாசிகள் மட்டுமல்ல ஊழியக்காரர்களையும் சோர்ந்து போக செய்கிறது. தேவனுடைய பிள்ளைகளில் பணம் இன்று பிசாசின் பொக்கிஷங்களுக்குள் சிறைப்பட்டுகிடக்கிறது. இவைகளை நீங்கள் கட்டவிழ்த்தால் நீங்கள் பொருளாதார தடைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள், தேவனுடைய ஊழியங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உங்களுடைய வாஞ்சைகள் நிறைவேறும். தேவன் உங்களுக்கு கொடுத்த அதிகாரத்தை பயன்படுத்தி ஏசா 45:4ன் படி வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் கட்டவிழ்த்துவிடுங்கள். பொருளாதார தடைகள் நீங்குவதை காண்பீர்கள்.
தேவன் உங்களுக்கு கொடுக்கும் அடுத்த அதிகாரம் சிறைப்படுத்தும் அதிகாரம். முதலாவது நம்முடைய எண்ணங்கள் சிறைப்படுத்தப்பட வேண்டும். அப்பொழுது பரிசுத்தமும் விசுவாசமும் வளரும். எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.(2கொரி 10:4-5) எண்ணங்களை சிறைப்படுத்துவதில் தான் அநேகர் தோல்வி அடைகிறார்கள். அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்,(நீதி 23:7) நம்முடைய எண்ணங்கள் பரிசுத்தமாய் இருந்தால் நம்முடைய ஜீவியமும் பரிசுத்தமாய் இருக்கும். நம்முடைய எண்ணங்கள் அவிசுவாசமாய் இருந்தால் நம்முடைய வாழ்க்கையில் தோல்விகள் ஏற்படும். தேவன் கொடுத்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குள்ளாய் சிறைப்படுத்துங்கள்.
அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம்.(மத் 12:29) இன்றைக்கு நீங்கள் வாழ்கிற பகுதியில் உங்களை கிரியை செய்யமுடியாத படி உங்களை தடுக்கிறவன் பலவான். ஓவ்வொரு பட்டணத்திற்கும் ஒரு பலவான் உண்டு. பலவானுடைய வீடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பலவான் உண்டு. பலர் உங்களுடைய குடும்பத்தினருடைய இரட்சிப்புக்காக ஜெபிக்கிறீர்கள். உங்கள் பகுதியின் இரட்சிப்புக்காக, உங்கள் தேசத்தின் இரட்சிப்புக்காக ஜெபிக்கிறீர்கள். உங்கள் பகுதியின் பலவான் யார்? விபசார ஆவியா? வேசித்தனத்தின் ஆவியா? கொலை வெறி ஆவியா? திருமண வாழ்கையில் இனைந்தவர்களை பிரிக்கிற ஆவியா? எதுவாக இருந்தாலும் தேவன் உங்களுக்கு கொடுத்துள்ள அதிகாரத்தினால் பலவானின் ஆவிகளை கட்டுங்கள், சிறைபடுத்துங்கள். உங்கள் குடும்பத்தினரின் இரட்சிப்பை, உங்கள் பகுதியின் ஜனங்களின் இரட்சிப்பை காண்பீர்கள்.
பிரியமானவர்களே, இந்த மாதத்தின் வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதமாக தேவன் கொடுத்துள்ள சாவி அதிகாரம். பரலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பரலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
No comments:
Post a Comment