தேவன் உங்கள் சிறையிருப்பை திருப்பி, உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று சொல்லுகிறார். சிறையிருப்பு என்பது சுதந்திரத்தை இழந்து காணப்படுகிற ஒரு அடிமைத்தனமாகும். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாத போது, இஸ்ரவேல் ஜனங்கள் பலமுறை சிறைபிடிக்கப்பட்டார்கள் அடிமைதனத்தில் வாழ்ந்தார்கள். அவர்களுடைய சிறையிருப்பின் காலங்களில் அவர்கள் அவமானப்பட்டார்கள், நிந்தையடைந்தார்கள், பரியாசம் செய்யப்பட்டார்கள், ஒடுக்கப்பட்டார்கள். அவர்கள் ஒடுக்கப்படும் வேலைகளிலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டார்கள். தேவன் அவர்கள் சிறையிருப்பை திருப்பினார். இன்றைக்கு நீஙகளும்; உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் பலவிதமான அடிமைதனத்தில் காணப்படுகிறீர்கள். ஒரு வேலை சரீர பிரகாரமாக அடிமைதனத்தில் காணப்படாவிட்டாலும் ஆத்துமாவிலும், ஆவியிலும் அடிமைத்தனம் காணப்படுகிறது. தேவனை அறிந்திருந்தும் சிலர் இன்னும் சில பாவ பழக்கத்திற்கு அடிமைகளாக காணப்படுகிறீர்கள். நீங்கள் அதிலிருந்து விடுபட விரும்புகறீர்கள் ஆனால் நீங்கள் சிறையிருப்பில் காணப்படுகிறபடியினால் உங்களை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.(யோ 8:34). ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம்.(தீத்து 3:3). இன்றைக்கு கர்த்தர் உங்கள் சிறையிருப்பை மாற்றுகிறார். இயேசு கிறிஸ்துவுக்குள் காணப்படுகிற ஒரு விஷேச அபிஷேகம் சிறைப்பட்டவர்களை விடுவிப்பதாகும். கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார், இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், . கர்த்தருடைய அநுக்கிரகவருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்,(ஏசா 61:1-3).
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் சிறையிருப்பை மாற்றுகிறவர். அவருடைய வாயிலிருந்து வார்த்தை புறப்பட்டது, இருளை வெளிச்சமாக பிரகாசிக்கச்செய்தார். இன்றைக்க கர்த்தருடைய வார்த்தை உங்கள் சிறையிருப்பை மாற்றி உங்களுக்கு கீர்த்தியும் புகழ்ச்சியும் உண்டாக்கப்போகிறது. பிரியமானவர்களே முன்னே பிசாசின் அடிமைதத்தில் இருந்த நீங்கள் மீண்டும் அவனிடத்தில் சிறைப்பட்டு போதகாதபடி தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், சத்தியத்தையும் கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அடிமைதனத்தின் நுகத்தை முறிக்கிறவர். நீங்கள் ஒருவேளை பரிசுத்த ஆவியை பெற்றிருக்கலாம், ஆனால் எப்பொழுதும் ஆவியினால் நிறைந்து காணப்படுகிற அனுபவம் உங்களிடத்தில் இல்லை எனவே நீங்கள் அடிமைதனத்தில் காணப்படுகிறீர்கள். நீங்கள் பாவ சோதனைகளுக்கு உட்படும் முன்னே பரிசுத்த ஆவியானவர் பாவத்தை குறித்தும், நியாயத்தீர்பையும் குறித்து கண்டித்து உணர்த்துவார். நீங்கள் பாவத்திற்கு விலகி பாவத்தை ஜெயிப்பீர்கள். சந்தோஷத்தினால் நிறப்பப்படுவீர்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும், நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார், நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.(யோ 16:7,8). தேவன் தம்முடைய வார்த்தையாகிய சத்தியத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறார். இந்த சத்தியம் உங்களை விடுவிக்கும். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.(யோ 8:32). தேவனுடைய வார்த்தையே சத்தியம். நீங்கள் அவைகளை அறிந்து அதன் படி நடக்கவேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயின் மூலம் தேவனுடைய வார்த்தையை அறிந்து கொண்டார்கள் ஆனால் அதின் படி நடக்கவில்லை எனவே அடிமைபட்டுபோனார்கள். நீங்கள் தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்தின் படி நடவுங்கள் உங்கள் சிறையிருப்பு மாறுவதை காண்பீர்கள். உங்கள் சிறையிருப்பு மாறும் போது சந்தோஷமும், மகிழ்ச்சியும் உண்டாகும். சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.(சங் 14:7).
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். - எரேமியா 31:23
No comments:
Post a Comment