Wednesday, 13 November 2013



அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டு மந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற் போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். – ஆபகூக் 3:17-18


நீங்கள் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்களா? எந்த சூழ்நிலையில் தீர்க்கதரிசி கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்று சொல்லுகிறார். அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற் போனாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன் என்று சொல்லுகிறார். அப்படியானால் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது என்பது நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு அனுபவம். எனவே அப்போஸ்தலராகிய பவுல் கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறார். கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.(பிலி 4:4) பரியமானவர்களே, தேவன் நம்முடைய வாழ்க்கையில் செய்த ஒவ்வொரு நன்மைகளையும் நீங்கள் நினைத்து எப்போதும் சந்தோஷமாய் இருக்க வேண்டும். இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையில் சந்தோஷமில்லை, காரணம் அவர்களுடைய வாழ்க்கையில் பற்றாக்குறை, தேவைகள் சந்திக்கப்படவில்லை, மற்றவர்களை பார்த்து ஒப்பிட்டு தங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று மனம் உடைந்து காணப்படுகிறார்கள். கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கும் வழியை தேவன் நமக்கு அவருடைய வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ளார். என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், ப+மியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன், கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.ஏசா 58:13-14) யார் கர்த்தருக்குள் மகிழ்சியாய் இருப்பார்கள், பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளை கைகொள்கிறவர்கள். இந்த கடைசி நாட்களில் விசுவாசிகள் உலக வாழ்க்கைக்காக ஆராதனையை புறக்கணிக்கிறார்கள். தேவனுடைய சமூகத்தை காட்டிலும் சொந்த வேளைகளை செய்வதிலே ஆர்வம் காட்டுகிறார்கள். ஆறு நாட்களும் வேலை செய்ததால் ஏற்படும் சீரீர பொவீனத்தின் நிமித்தம் பலர் ஆராதனைக்கு செல்வதில்லை. நீங்கள் ஒரு நாளும் உங்கள் சபை ஆராதனையை விட்டுவிடாதீர்கள் அப்பொழுது தான் கர்த்தருக்குள் மகிழ்சியாய் இருக்கும் அனுபவத்தை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.


என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.(சங் 35:9) கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருப்பது என்பது தேவனோடு இனைந்து, அவரோடு நாம் மகிழ்ச்சியாய் இருக்கும் ஓர் அனுபவம். தேவனோடு இனைந்திருக்கும் நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய சூழ்நிலைகளை காட்டிலும் பெரிய தேவன் அவனோடு இருக்கிறார். உங்களுடைய பிரச்சனைகள், போராட்டத்தை காட்டிலும் பெரிய தேவன் அவனோடு இருக்கிறார். எனவே அவன் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள். தேவன் உங்கள் வாழ்க்கையில் செய்த நன்மைகளை நினைத்து நீங்கள் சந்தோஷமாய் இருக்கும் போது உங்களை கண்டு தேவன் மகிழ்கிறார். நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக.(உபா 26:11) உங்களை மகிழ்விக்கும்படியாய் தேவன் உங்கள் வாழ்க்கையில் பல நன்மைகளை உண்டாக்குகிறார். உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!(சங் 31:19) இப்பொழுது தேவன் உங்களுக்கு செய்த நன்மைகளையும், அவைகளை நீங்கள் பெற்றுக்கொண்ட விதத்தையும் நினைத்து பாருங்கள். உங்கள் இருதயம் சந்தோஷத்தினால் பொங்கும். நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது, அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை.(யாக் 1:17) உங்களுடைய இருதயத்தில் பல விதமான வேண்டுதல் இருக்கிறது. தேவனிடத்திலிருந்த பல காரியங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் பாரங்களையும், கவலைகளையும் தேவன் பார்த்துக்கொள்வார் என்று விசுவாசித்து கர்த்தருக்குள் மகிழ்சியாய் இருங்கள். உங்கள் வேண்டுதல்களை அனைத்தும் நிறைவேறும். கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.(சங் 37:4)


கர்த்தருக்குள் ப+ரிப்பாய் மகிழுகிறேன், என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது, மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார். – ஏசாயா 61:10

No comments:

Post a Comment