Monday, 2 December 2013





தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். - லூக்கா 10:42

அன்றைக்கு மரியாள் நல்ல பங்கை தெரிந்து கொண்டாள் என்று தேவனே சாட்சி சொல்லுகிறார். அது போல இன்றைக்கு நீங்களும் நல்ல பங்கை தெரிந்துகொள்ளுங்கள் என்று தேவன் ஆலோசனை சொல்லுகிறார். நல்ல பங்கை மரியாள் பெற்றுக்கொள்ள என்ன காரணம்? அவள் உலக காரியங்களை காட்டிலும் தேவ சமுகத்தில் காத்திருப்பதையே நாடினாள். ஆம் அவள் தேவனுடைய சமுகத்தில், தேவனுடைய பாதத்தருகே அமர்ந்திருந்தாள். உங்கள் வாழ்கையில் நீங்கள் வேதனுடைய சமுகத்தில் அவருடைய பாதத்தருகே காத்திருந்ததுண்டா? எப்பொழுது தேவ சமுகத்திற்கு செல்வேன் என்ற ஏக்கம் காணப்படுகிறதா? நீங்கள் தேவனுடைய சமுகத்தை காட்டிலும் உலகத்தின் காரியத்திலும், உலக இச்சைகளிலுமே உங்கள் நேரங்களை செலவுசெய்கிறீர்கள். உலக கவலைகள் உங்களை நெருக்குகிறது, குடும்பத்தில் அனைவரையும் கவனிக்கும்படியாய் நீங்கள் காட்டும் பரபரப்பும் உங்கள் வாழ்கையில் கடினமான சூழ்நிலைகளை உருவாக்குகிறது. நீங்கள் இந்த உலகத்தில் சமாதானமான ஜீவனம் செய்யவேண்டும் என்றும் உங்கள் குடும்பத்தினரையும் நீங்கள் கவனிக்கவேண்டும் என்பதை தேவன் விரும்புகிறார் என்பது உண்மை. ஆனால் அவைளுகக்காக நீங்கள் காட்டும் முக்கியதுவத்தை காட்டிலும் தேவனுக்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும். நீங்களோ தேவனைக்காட்டிலும் உங்கள் பிரச்சனைகளுக்கும,; உலக காரியங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அதிக முக்கியதுவம் கொடுக்கிறீர்கள். மார்த்தாளுடைய வாழ்க்கையும் அப்படித்தான் காணப்பட்டது. மார்த்தாள் கர்த்தருடைய சமுகத்தில இருப்பதைக்காட்டிலும் தன் வேலைகளிலே கவனமாயிருந்தால். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய்.(லூக்கா 10:40-41). பிரியமானவர்களே மார்த்தாளை போல நீங்களும் அநேககாரியங்களை குறித்து கலங்குகிறீர்கள்.


நீங்கள் நல்ல பங்கை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்படாதிருங்கள. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?(மத் 6:25). தேவனுடைய சமுகத்தை முதலில் நீங்கள் நாடும் போது, கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அனைத்தையும் பார்த்துக்கொள்வார். நீங்கள் எதைக்குறித்தும் கவலைப்பட தேவையில்லை. கர்த்தர் உங்களுக்காக யாவையும் செய்து முடிப்பார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.(மத் 6:33). நீங்கள் முதலாவது தேவ சமுகத்தை நாடாமல், தேவனுடைய ஆலோசனையை தேடாமல் உங்கள் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயர்ச்சி எடுக்கிறீர்கள். ஆனால் அவைகள் முடிவதில்லை. அன்னாளுடைய வாழ்கையில் அவளுடைய கணவன் அவளுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தான். ஆனாலும் அவளுக்கு ஒரு தேவை இருந்தது. ஆம் அவளுக்கோ குழந்தையில்லாதிருந்தது. அன்னால் எப்பொழுது தன் தேவைகளுக்காய் தேவசமுகத்தை நாடினாலோ அப்பொழுதே அவளுடைய தேவை சந்திக்கப்பட்டது. நீங்களும் அன்னாலைப்; ஏதோ ஒரு தேவைகளுக்காக கண்ணீரோடும், கவலையோடும் காணப்படுகிறீர்கள். அன்னாள் தேவ சமுகத்தில் தன் இருதயத்தை ஊற்றினது போல நீங்கள் தேவனுடைய சமுகத்திற்கு அவருடைய பாதத்தருகே வாருங்கள். நிச்சயமாய் நல்ல பங்கை பெருவீர்கள். நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். (பிலி 4:6). தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?

உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன்கிடைப்பதாக என்றான். - ரூத் 2:12

No comments:

Post a Comment