Monday, 2 December 2013




அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன். இப்பொழுது நாம் கர்த்தருடைய கையில் விழுவோமாக. அவருடைய இரக்கங்கள் மகா பெரியது. மனுஷர் கையில் விழாதிருப்பேனாக என்றான். - 2சாமுவேல் 24:14.

ஒரு முறை தாவீதுக்கு தன்னுடைய படைபெலனை அறிந்து கொள்ள விரும்பினான். எனவே தேசம் முழுவதும் உள்ள தன்னுடைய ஜனங்களை எண்ணும்படி கட்டளையிட்டான். கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான். அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாதிபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண் முதல் பெயெர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.(2சாமு 24:1-2). இது தாவீது தன்னுடைய சுயபெலத்தை நம்புவதாய் இருந்தது. ஆம் தாவீதை உயர்த்தினவர் தேவன். ஆடுகளை மேய்த்துகொண்டிருந்த அவனை அபிஷேகம் செய்து ராஜாவாக உயர்த்தினார். இப்பொழுது தாவீது கர்த்தருடைய பெலத்தை நம்பாமல் தன்னுடைய வீரர்களின் பெலத்தை நம்பினான். இது கர்த்தருக்கு முன்பாக பாவமாக காணப்பட்டது. தாவீது செய்த காரியத்திற்கு தண்டணையாக தேவன் மூன்று காரியங்களை முன்வைத்தார். அதில் ஒன்றை அவன் தெரிந்துகொள்ளும்படி சொன்னார். தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது: நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன், அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்து கொள்;, அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்தில் ஏழு வருடங்கள் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப் போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்று நாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோக வேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான். (2சாமு 24:11-13).


அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன். இப்பொழுது நாம் கர்த்தருடைய கையில் விழுவோமாக. அவருடைய இரக்கங்கள் மகா பெரியது. மனுஷர் கையில் விழாதிருப்பேனாக என்றான்.(2சாமு 24:14) தாவீது நான் ஒரு போதும் மனுஷனுடைய கையில் விழக்கூடாது, ஒரு போதும் சத்துருக்கள் கையிலும் விழக்கூடாது என்று தேவனுடைய கையில் தன்னை ஒப்புக்கொடுத்தான். தாவீத தன்னுடைய இடுக்கமாண சூழ்நிலையில் தேவனே உதவி செய்யமுடியும் என்பதை அறிந்திருந்தான். தாவீது விசுவாசித்தபடி தேவன் வாதையை நிறுத்தினார். அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினான், அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.(2சாமு 24:25). பிரியமானவர்களே! பல நேரங்களில் உங்களுடைய வாழ்க்கையிலும் பெறுமை காணப்படலாம். எனவே உங்களுடைய பெலத்தையும் பராக்கிரமத்தையும் வெளிபடுத்தியிருக்கலாம். இதன் நிமித்தம் தேவன் உன் வாழ்க்கையிலும் சிட்சைகளை அனுமதித்திருக்கலாம். பிரியமானவர்களே, தேவனே உங்கள் காயங்களை கட்டுகிறவர், அவருடைய கரத்தில் மன்னிப்பு உண்டு, அவருடைய இரக்கம் மகா பெரியது. இன்றைக்கு உங்களுடைய சூழ்நிலையில் மனிதர்கள் மத்தியில் நீ வெட்கப்படாமல் இருக்க உங்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுங்கள். நீங்கள்; தேவனை விட்டு விலகி செய்த்த பாவங்கள், அக்கிரமங்கள், அவருக்கு பிரியமில்லாத காரியங்களுக்கு தண்டணை பெரியதுதான். ஆனால் தேவன் உங்களிடம் கொண்டுள்ள அன்பும், இரக்கமும் அதைவிட பெரியது. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். (நீதி 28:13). மனிதனுடைய அன்பிற்கும் இரக்கத்திற்கும் ஒர் அளவு உண்டு. ஆனால் தேவனுடைய இரக்கம் மகாபெரியது அது அழவிட முடியாதது. என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். (உபா 5:10).


அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. - லூக்கா 1:50

No comments:

Post a Comment