Thursday, 2 January 2014





கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். - ஏசாயா 58:11


உங்கள் வாழ்க்கையில் பல நேரங்களில் சில முக்கியமான முடிவு எடுப்பதற்கும், உங்களை நடத்துவதற்கு ஒருவரும் இல்லை. எனவே இதன் நிமித்தம் நீங்கள் குழப்பம் அடைகிறீர்கள். பல தோல்விகளை சந்தித்திருக்கிறீர்கள். எங்களை சரியான பாதையில் நடத்த ஒரு வரும் இல்லை என்று நீங்கள் இனி கலங்கத்தேவையில்லை. உங்களை நடத்துவதற்காக நானே நல்ல மேய்ப்பன் என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். ஆட்டு மந்தைகளை ஒரு மேய்ப்பன் எப்படி நடத்தி செல்கிறாரோ அது போல உங்களை நடத்துகிறவர் தேவன். மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளுக்குத் தக்கபடி அதனை நடத்துகிறான். சினை ஆடுகளையும், கறவல் ஆடுகளையும் மெதுவாய் நடத்தி செல்வான். பெலவீனமான ஆடுகளை காணும் போது அதை தன் தோளின் மேல் சுமர்ந்து செல்வான். அதை போலவே தேவன் உங்களையும் நித்தமும் நடத்துகிறார். மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.(ஏசா 40:11). ஆடுகளை மேய்த்துகொண்டிருந்த தாவீது தேவன் தன்னை நடத்தின பாதைகளை நினைத்து கர்த்தர் தன்னுடைய மேய்ப்பர் என்று அன்புடன் அழைக்கிறார். கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.(சங் 23:1-3). இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.(சங் 80:1). தாவீதை போல உங்களுக்கும் கர்த்தரை மேய்பராய் இருக்கிறாரா? தேவன் உங்களுக்கு மேய்ப்பராக இருந்து உங்களை நடத்தும் போது நீங்கள் சோர்ந்து போகமாட்டீர்கள். உங்கள் வாழ்க்கையில் குறைவு காணப்படாது. நன்மையும் கிருபையும் உங்களை தொடரும். நீங்கள் வாலாகாமல் தலையாவீர்கள், கீழாகாமல் மேலாவீர்கள். உங்களை நீர்ப்பாய்ச்சலான இடங்களில் நடத்துவார், நீங்கள் செழிப்பை காண்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் போராட்டங்கள், சோதனைகள், நெருக்கங்களை நீங்கள் கடந்துபோனாலும் நீங்கள் கலங்கமாட்டீர்கள். நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.(சங் 23:4). உங்களை விரோதிக்கிறவர்களுக்கு முன்பாகவும், உங்களுடைய சத்துருக்கள் மத்தியிலும் நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். நீங்கள் எப்பொழுதும் தேவனுடைய அபிஷேகத்தில் நிலைத்திருப்பீர்கள். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.(சங் 23:5).


தேவன் உங்களை நீங்கள் நடக்க வேண்டிய வழிகளில் நடத்துகிறவர். இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.(ஏசா 48:17). ஆபிகாமின் குமாரனாகிய ஈசாக்குக்கு ஏற்ற துணையை தேடும் பொறுப்பை ஆபிரகாம் எலியேசரின் கையில் ஒப்புக்கொடுத்தார். எலியேசர் இந்த பொறுப்பை பெரிய உத்திரவாதமாக எடுத்துக்கொண்டு, மிகுந்த ஜெபத்தோடு இந்த காரியத்தை தேவனுடைய கரத்தில் பூரணமாய் அர்ப்பணித்தார். என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவுசெய்தருளும். இதோ, நான் இந்தத் தண்ணீர்த்துரவண்டையில் நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான். (ஆதி 24:12-14). தேவன் எலியேரின் ஜெபத்தை கேட்டார். எலியேசர் மனதில் நினைத்திருந்தபடியே காரியங்கள் அனைத்தும் நடந்தன. தண்ணீர் துரவண்டைக்கு வந்த ரெபேக்காளிடம் எலியேசர் தண்ணீர் கேட்டார். அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்லி; சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.(ஆதி 24:18-20). எலியேசர் இறுதியில் தேவனுடைய அனாதி தீர்மானத்தின்படி ஈசாக்கிற்கு தேவன் நியமித்த ரெபேகாளை அழைத்து கொண்டு அபிரகாமிடத்திற்கு வந்தார். இதைக்குறித்து எலியேசர் சொல்லும் போது என்னை நேர்வழியாய் நடத்தி வந்த தேவன் என்று சொல்லுகிறார். தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.(ஆதி 24:48). பிரியமானவர்களே! தேவனிடத்தில் தன் காரியத்தை பூரணமாய் ஒப்புக்கொடுத்த எலியேசரை தேவன் எப்படி எந்த ஒரு தடையில்லாத படி நடத்தினாரோ. அதை போல உங்கள் வாழ்க்கையில் எந்த காரியமானாலும் தேவனிடத்தில் பூரணமாய் ஒப்புக்கொடுத்து காரியங்களை செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் நடக்க வேண்டிய வழிகளில் நடத்துகிறவர் தேவன் என்பதை அறிவீர்கள்.


அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல்படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார். - ஏசாயா 49:10.

இந்த காரியத்தை தேவனுடைய கரத்தில் பூரணமாய் அர்ப்பணித்தார். என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவுசெய்தருளும். இதோ, நான் இந்தத் தண்ணீர்த்துரவண்டையில் நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான். (ஆதி 24:12-14). தேவன் எலியேரின் ஜெபத்தை கேட்டார். எலியேசர் மனதில் நினைத்திருந்தபடியே காரியங்கள் அனைத்தும் நடந்தன. தண்ணீர் துரவண்டைக்கு வந்த ரெபேக்காளிடம் எலியேசர் தண்ணீர் கேட்டார். அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்லி@ சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.(ஆதி 24:18-20). எலியேசர் இறுதியில் தேவனுடைய அனாதி தீர்மானத்தின்படி ஈசாக்கிற்கு தேவன் நியமித்த ரெபேகாளை அழைத்து கொண்டு அபிரகாமிடத்திற்கு வந்தார். இதைக்குறித்து எலியேசர் சொல்லும் போது என்னை நேர்வழியாய் நடத்தி வந்த தேவன் என்று சொல்லுகிறார். தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன்.(ஆதி 24:48). பிரியமானவர்களே! தேவனிடத்தில் தன் காரியத்தை பூரணமாய் ஒப்புக்கொடுத்த எலியேசரை தேவன் எப்படி எந்த ஒரு தடையில்லாத படி நடத்தினாரோ. அதை போல உங்கள் வாழ்க்கையில் எந்த காரியமானாலும் தேவனிடத்தில் பூரணமாய் ஒப்புக்கொடுத்து காரியங்களை செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் நடக்க வேண்டிய வழிகளில் நடத்துகிறவர் தேவன் என்பதை அறிவீர்கள்.


அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை@ உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல்படுவதுமில்லை@ அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார். - ஏசாயா 49:10.

No comments:

Post a Comment