Thursday, 2 January 2014



அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். – எரேமியா 30:17

தேவன் உங்கள் சரீரத்திலும், ஆத்துமாவிலும் உள்ள காயங்களை ஆற்றுவார். அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.(சங் 107:20). இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான், அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.(லூக்கா 10:30-34). இங்கு ஒரு மனுஷன் எரிகோவுக்குப் போகையில் கள்ளர்களால் காயப்பட்டான் என்று பார்க்கிறோம். எருசலேம் என்பது தேவன் வாசம் செய்யும் இடமாகும். எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.(சங் 135:21). பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.(சங் 125:2). எரிகோ என்பது சபிக்கப்பட்ட இடமாகும். அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன், அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.(யோசுவா 6:26) இங்கு இந்த மனுஷன் தன்னுடைய ஜீவியத்தில் எருசலேமிலிருந்து எரிகோவுக்கு போவதை வாசிக்கிறோம். இது அவனுடைய பின்மாற்றத்தைக் குறிக்கிறது. அப்படி போகையில் அவன் கள்ளர்களாகிய பிசாசு கையில் அகப்படுகிறான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.(யோ 10:10). திருடன் அவனுடைய வஸ்திரங்களை உரிந்து கொண்டு அவனை காயப்படுத்துகிறான். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை ஆராய்ந்து பாhருங்கள் நீங்கள் தேவனை அதிக அதிகமாய் நெருங்கும்படி எருசலேமை நோக்கி போகிறீர்களா, இல்லையென்றால் பின்மாற்றத்தோடு எரிகோவுக்கு போகிறவர்களாய் காணப்படுகிறீர்களா? ஒரு காலத்தில் இரட்சிப்பின் சந்தோஷத்தை நன்கு அனுபவித்து இப்பொழுது அதை இழந்து போய் காணப்படுகிறீர்களா? வாழக்கையில் சந்தித்த பலவித போராட்டங்களை கண்டு சோர்ந்து போய் சபைக்கு போவதை விட்டுவிட்டாயா? ஆதியிலிருந்த தேவனுடைய அன்பை விட்டுவிட்டாயா? ஜெப ஜீவியத்தையம், வேத வாசிக்கும் அனுபவத்தை இழந்து பின்மாற்றத்தில் காணப்படுகிறாயா? அப்படியானால் நீ கள்ளனாகிய பிசாசு கையில் அகப்பட்டுக்கொண்டாய், அவன் உன்னுடைய வஸ்திரங்களை உரிந்து காயப்படுத்தியுள்ளதால் நீ பின்மாற்றத்தில் காணப்படுகிறாய்.


ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்மாற்றமாய், சோர்ந்து போய் காணப்படுகிற உங்கள் வாழ்க்கையை அப்படியே விட்டுவட கிருபையுள்ள தேவனுக்கு சித்தமில்லை, இயேசு நல்ல சமாரியனாக இருக்கிறார். அவர் உங்கள் நிலையை காண்கிறார் நீங்கள் எப்படிப்பட்ட காயங்களோடு காணப்பட்டாலும் அவர் உங்கள் காயங்களை ஆறறுகிறார். தேவனை விட்டு தூர போனதின் நிமித்தம் இழந்த அனைத்தையும் நீ பெற்றுக்கொள்ள போகிறாய். நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள், என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.(யோவேல் 2:25-26). பல விதமான உலக அனுபவத்தினாலும் காயப்பட்டு, ஆத்துமாவில் வேதனையுற்று காணப்படுகிற உங்களை காயங்களை இயேசு ஆற்றுகிறார். பரிசுத்த ஆவியானவராகிற எண்ணையையும், திராட்சரசமாகிய அவருடைய இரத்தத்தையும் வார்தது, தேவனுடைய வார்த்தையினாலே உன்னை ஆற்றி தேற்றி உங்கள் காயங்களை இயேசு ஆற்றுகிறார். இயேசு உன்னை கள்ளர்களாகிய பிசாசின் கையிலிருந்து உன்னை காப்பாற்றி உனக்கு பாது காப்பு கொடுத்து உன் காயங்களை ஆற்றுகிறார். எனவே இனி நீங்கள் காயப்பட்டவர்காய், எழுந்து பிரசகாசிக்க முடியாதவர்களாய் முடவனைபோல இருக்கவேண்டியதில்லை. எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள், பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள், விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. தூசியை உதறிவிட்டு எழுந்திரு, எருசலேமே, வீற்றிரு, சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.(ஏசா 52:1-2). நான் பாவத்தில் மீண்டும் வீழ்ந்து விட்டேனே இனி நான் பிரகாசிக்க முடியுமா என்று சந்தேகத்தோடு காணப்படுகிற உங்களை தேவன் மீண்டும் எழும்பி பிரகாசிக்க செய்ய சித்தமுள்ளவராய் இருக்கிறார். இதினிமித்தம்: நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன், என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய், நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய், நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.(எரே 15:19).

நான் காணாமற்போனதைத்தேடி, துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன், நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன். – எசேக்கியேல் 34:16

No comments:

Post a Comment