நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர், என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம்பண்ணினேன். – சங்கீதம் 17:3
இந்த உலக வாழ்க்கையில் நாம் பல காரியங்களில் தீர்மானங்களை எடுக்கிறோம். நம்முடைய நேரங்களை எப்படி பயன்படத்துவது, வீட்டிற்கு என்ன வாங்குவது, பிள்ளைகளின் படிப்பு, திருமண காரியங்கள், வருங்காலங்களை குறித்து தீர்மானங்களை எடுக்கிறோம். ஆது போல ஆவிக்குரிய ஜீவியத்திலே தீர்மானங்கள் எடுக்கிறோமா? தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற ஞாபகம் சிலருக்கு தங்கள் பிறந்த நாளும், புது வருடமும், தான் ஞாபகத்திற்கு வரும். அப்பொழுது தேவன் அவர்களை ஆசிர்வதிக்கும்படி இந்த வருடம் முதல் நான் ஒழுங்காக வேதம் வாசிப்பேன், ஆலயத்திற்கு செல்வோம், தினமும் ஜெபிப்பேன் என்று தீர்மானம் எடுப்பார்கள். அவர்கள் செய்த தீர்மானத்தின் படி சில நாட்கள் மட்டுமே செய்வார்கள். இங்கு தாவீது சொல்லுகிறார் என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம்பண்ணினேன். தாவீது தான் எடுத்த தீர்மானத்தில் வைராக்கியமாயும், உறுதியாயும் இருந்தான். பிரியமானவர்களே, நீங்கள் எடுக்கும் தீர்மானம் தேவனை நேசிப்பதை குறித்தும், அவருக்காக ஊழியம் செய்வதைக்குறித்தும் இருக்குமானால் தேவன் அதில் பிரியமாயிருப்பார். அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார். நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும். தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.(ஆதி 28:20-22) இங்கு யாக்கோபு எடுக்கும் தீர்மானத்தை நாம் வாசிக்கிறோம். இங்கு யாக்கோபு தேவனுக்கு என்று தசமபாகம் கொடுப்பதை ஒரு தீர்மானமாக எடுக்கிறார். ஆனால் அவர் தேவனோடு தீர்மானம் செய்யும் போது ஒரு நிபந்தனையோடு தீhமானம் செய்கிறார். நீங்கள் ஆண்டவருக்கென்று கொடுப்பதை குறித்து திர்மானம் எடுக்கம் போது நிபந்தனை இல்லாமல் அன்பினால் தீர்மானம் செய்யுங்கள். அப்பொழுது தேவன் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கப்பண்ணுவார்.
உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன், உமது வசனத்தை மறவேன்.(சங் 119:15-16) இது தாவீது எடுத்த தீர்மானம். தேவனுடைய வார்த்தையை மகிழ்சியாக ஏற்றுக்கொள்வேன், என்றும் தேவனுடைய வார்த்தையை தியானிப்பேன் என்று தீர்மானம் செய்கிறான். இன்றைக்கு நீங்கள் வேதத்ததை தினமும் தவறாமல் வாசிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதை மகிழ்சியோடு செய்கிறீர்கள். தேவனுடைய வார்த்தையின் மேல் உங்களுக்கு ஒரு நேசம் இருக்க வேண்டும். அவருடைய வார்;தையின் மேல் ஒரு தாகம் இருக்க வேண்டும். அப்பொழுது அவருடைய வார்த்தை எப்பொழுதெல்லாம் வருகிதோ அதை உங்களுக்கு என்று எடுத்துக்கொள்வீர்கள். அவருடைய வசனம் உங்களுக்கு தியானமாகும். அவருடைய வசனத்தை நீங்கள் தியானிக்கும் போது நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லா
நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே, அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச் செய். – பிரசங்கி 5:4
No comments:
Post a Comment