துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். – சங்கீதம் 1:1-2
இந்த சங்கீதம் உங்கள் எல்லோருக்கும் மிகவும் பழக்கமான, மனப்பாடமான சங்கீதம். தாவீது தான் எழுதின முதல் சங்கீதத்தில் சொல்லுகிற ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தை பாக்கியவான்கள். பாக்கியவான்கள் என்று சொல்லும்போது அதற்கு பேர்பெற்றவர்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், சிறப்புடையவர்கள், விளிமை பெற்றவர்கள், அதிஷ்டசாலிகள் என்றெல்லாம் அர்த்தம் உண்டு. தேவன் உங்களை எப்பொழுதும் பாக்கியமுள்ளவர்களாக பார்கிறார். இஸ்ரவேலே, நீ பாக்கியவான், கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே, உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள், அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.(உபா 33:29). இயேசு கிறிஸ்துவும் தம்முடைய மலைபிரசங்கத்தில் யார் யார் பாக்கியவான்கள் என்பதை குறித்து போதித்துள்ளார். உங்களுக்கு நான்கு விதமான பாக்கியமான ஆசீர்வாதங்களை தேவன் வைத்துள்ளார். முதலாவது இம்மைக்குரிய பாக்கியங்கள். அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.(ஆதி 30:13). சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் ப+மியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.(
இன்றைய தியானத்தில் தேவன் தம்முடைய வார்த்தைக்கு செவிகொடுக்கிறவர்களை குறித்து பாக்கியவான்கள் என்று சொல்லுகிறார். நீங்கள் துன்மார்கருடைய ஆலோசனையில் நடக்கக்கூடாது. உங்களுடைய அனுதின வாழ்க்கையில் உங்களுக்கு ஆலோசனைகளை சொல்லுகிற பலர் உண்டு. அவர்கள் உங்களுக்கு சொல்லும் ஆலோசனைகளை நீங்கள் கேட்டவுடன் அதை கர்த்தருடைய வார்த்தையோடு ஒப்பிட்டுப்பாருங்கள். உங்களுக்கு ஆலோசனை கொடுத்தவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அது வேத வசனத்தின்படி இருந்தால் நீங்கள் அவர்களுடைய வார்த்தைக்கு செவிகொடுங்கள் அப்பொழுது நீங்கள் பாக்கியவான்கள். பாவிகளுடைய வழியில் நீங்கள் நிற்கக்கூடாது. இந்த உலகத்தில் இரண்டு விதமான வழிகள் உள்ளது. ஓன்று தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு உங்களை வழிநடத்தும் இடுக்கமான வழி. இரண்டாவதாக நரகத்திற்கு உங்களை நடத்தி செல்லும் விசாலமான வழி. இது பாவிகளுடைய வழி. எனவே உங்களுடைய வழிக்கும் பாவிகளுடைய வழிக்கும் வித்தியாசம் காணப்படவேண்டும். பாவிகளுடைய வழிகளைபோல உங்கள் வழிகளும் காணப்பட்டால் நீங்கள் பாக்கியவான்களாக வாழ முடியாது. இன்றே சாட்சியான வாழ்க்கையை வாழ்ந்து பாவிகளுடைய வழிகளிலிருந்து உங்களை பிரித்துக்கொள்ளுங்கள் அப்பொழுது நீங்கள் பாக்கியவான்கள். பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் நீங்கள் உட்காரக்கூடாது. பாரியாசக்காரர்கள் இந்த உலகத்தின் இச்சைகளின் படி தங்களுடைய வாழ்க்கையை நடத்துகிறவர்கள். முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.(2பேதுரு 3:3-4). கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே.(யூதா 1:18). நீங்கள் இந்த உலகத்திற்காக வாழாமல் தேவனுடைய இராஜ்ஜியத்தை சுதந்தரித்துக்கொள்ள தக்கதாக வாழும் போது நீங்கள் பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் நீங்கள உட்காருவதில்லை. நீங்கள் அவருடைய வருகைக்காக உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்வீர்கள். நீங்கள் பாக்கியவான்கள்.
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். – வெளிப்படுத்தின விசேஷம் 22:14
No comments:
Post a Comment