கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும் அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள் நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். - லூக்கா 6:38
மனிதனுடைய இயல்பு என்னவென்றால் கொடுப்பதை காட்டிலும் வாங்குவதாகும். ஆனால் நம் ஆராதிக்கிர தேவன் கொடுக்கிறவர். அவர் எப்படி கொடுக்கிறவராய் இருக்கிறாரோ அது போல் நாமும் கொடுக்கிறவராக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இன்று அநேகர் நாம் தான் முதலில் கொடுக்கிறோம் என்று நினைக்கிறார்கள். ஏன் நாம் தேவனுக்கு கொடுக்க வேண்டும்? என்பதை அறியாமல் இருக்கிறார்கள். வேதத்தில் ஆதியாகமம் 4ம் அதிகாரத்தில் தான் தேவனுக்கு என்று காணிக்கை கொடுப்பதை முதலில் பார்க்கிறோம். காயீனும், ஆபேலும் தேவனுக்கு கொடுக்கிறார்கள். சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.(ஆதி 4:3-4). இங்கு தேவனுக்கு கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக்கொடுத்தது யார்? நிச்சயமாய் ஆதாமும், ஏவாளும் தான் அவர்களுக்கு கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். ஆதாமும், ஏவாளும் எப்படி தேவனுக்கு கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டார்கள்? பிரியமானவர்களே, நாம் ஆராதிக்கும் தேவன் கொடுக்கிற தேவன். தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?(ரோமர் 8:32) அவருடைய அடிசுவடுகளை நாம் பின்பற்றும்படி தேவனே முதலில் கொடுத்தார். தேவன் மனிதனை சிருஷ்டித்து அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் ப+மியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.(ஆதி 2:7) மனிதனுக்கு பூமியில் வாழ தேவையான அனைத்தையும் கொடுத்தார். ப+மியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், ப+மியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல ப+ண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார், அது அப்படியே ஆயிற்று.(ஆதி 1:30) தேவனுக்கு நாம் கொடுக்கும் போது அவர் நமக்க அதிகமாக கொடுப்பது நிச்சயம். எனவே பிரியமானவர்களே, நாம் தேவனுக்கு கொடுப்பது அவர் நமக்கு மீண்டும் கொடுப்பார் என்ற எண்ணத்துடன் அல்ல. அவர் முதலில் நமக்கு கொடுத்திருக்கிறார்.
வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு, அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.(நீதி 11:24) இன்றைக்கும் பல தேவனுடைய பிள்ளைகளின் வாழ்க்கையில் தேவனுக்கு என்று கொடுக்கும் பழக்கம் இல்லை. அவர்களிடத்தில் நீங்கள் ஏன் என்ற காரணத்தை கேட்டால் அவர்கள் சொல்லும்பதில். அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் அவர்களுடைய தேவைகளையே பூர்த்தி செய்ய முடிவதில்லை என்பதாகும். தேவனுக்கு என்று கொடுப்பதற்கு விசுவாசம் உங்களுக்கு தேவை. அப்பொழுது தான் உங்களுடைய தேவைகளை குறித்து கவலைப்படாமல், எந்த நிலையிலும் தேவனுக்கு என்று கொடுக்க முடியும். நீங்கள் தேவனுக்கு என்று விசுவாசத்தில் கொடுக்கும் போது தேவன் உங்கள் பேரில் பிரியமாய் இருக்கிறார். உங்கள் தேவைகளை சந்திக்க தேவனால் கூடும். தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை. பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.(2கொரி 9:6) விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.(2கொரி 9:10) தேவன் உங்களுக்க என்ன கொடுத்திருக்கிறாறோ அதை தேவனுக்காக கொடுங்கள். தேவனுடைய இராஜ்யத்திற்கு விதையுங்கள். தேவன் நிச்சயமாய் அதை பெருகச்செய்து பெரிய அறுவடையாக உங்களுக்கு கொடுப்பார். உங்களுடைய தேவைகள் நிச்சயமாய் சந்திக்கப்படும். தேவனுக்கு என்று நீங்கள் கொடுப்பது விதைப்பதாகும். நீங்கள் விதைக்கும் விதைக்கு நூறு மடங்கு பலன் உண்டு. தேவனுக்கு என்று நீங்கள் கொடுக்கும் விதை எதுவாகவும் இருக்கலாம். உங்களுடைய விதை நேரமாக இருக்கலாம், தேவ சமுகத்தில் நேரத்தை செலவிடுங்கள். உங்களுடைய விதை தாலந்துகளாக இருக்கலாம். தேவனுக்காக உங்கள் அறிவையும் தாலந்துகளையும் செலவிடுங்கள். உங்களுடைய விதைகள் பணமாக இருக்கலாம். தேவனுடைய இராஜ்யத்தின் சுவிசேஷ வேலைக்காக கொடுங்கள்.
மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார் மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். – கலாத்தியர் 6:7
No comments:
Post a Comment