நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன், உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். நான் உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். தேவனுடைய ஆலோசனை நித்தியம் என்று தாவீது சொல்லுகிறார். கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.(சங் 33:11) அவருடைய நாமம் ஆலோசனை கர்த்தர். தாவீது தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தேவனுடைய ஆலோசனைக்காக அவருடைய சமூகத்தை நாடினான். எனவே தாவீது எந்த மனுஷனுடைய ஆலோசனையையும் நாடவில்லை. தேவனுடைய ஆலோசனையின் மூலம் எப்பொழுதும் ஜெயம் பெற்றார். தேவன் தாவீதுக்கு ஆலோசனைகளை கொடுத்து அவனுடைய எல்லா சத்துருக்களிடமிருந்து ஜெயம் கொடுத்தார்.
அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான்.(நியா 13:8). மனோவாவை குறித்தி நியாதிபதிகள் 13ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இங்கு அவர் பிறக்கப்போகிற பிள்ளைக்காக அதை எப்படி வளர்க்கவேண்டும் என்று தேவனிடத்தில் ஆலோசனை கேட்கிறார். நீங்கள் உங்களின் பிள்ளைகளுக்காக யாரிடத்தில் ஆலோசனை கேட்கிறீhகள்? தேவனிடத்திலா? ஆல்லது மனிதர்களிடத்திலா? அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன, அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள்.(ஆதி 25:22) இங்கு ரெபேக்காள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்காக தேவனிடத்தில் ஆலோசனை கேட்கிறாள்.
பிரியமானவாகளே, உங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையை குறித்து நீங்கள் மிகவும் வேதனை அடைகிறீர்கள். உங்கள் பிள்ளைகளை எப்படி தேவ பக்தியாய் நடத்தவேண்டும் என்று தேவனிடத்தில் ஆலோசனை கேட்டீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு உலகத்தின் பல காரியங்களை கற்றுக்கொடுக்கிறீர்கள். வேத வசனம் போதிக்கிறபடி தேவனுடைய வார்த்தைகளை கற்றுக்கொடுக்கிறீர்களா? ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்;@ அவர்கள் ப+மியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில், உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்@ அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.(உபா 4:9-10)
இன்றைக்கு பெற்றோர்கள் தேவனுடைய ஆலோசனையை கேட்காதபடி பல காரியங்களிலே தவறுகிறார்கள். தங்களுடைய பிள்ளைகளிடத்தில் ஜெபம் செய்தாயா? வேதம் வாசித்தாயா என்று கேட்பதில்லை. காரணம் அவர்களே வேதம் வாசிப்பதை மறந்துவிட்டார்கள், ஆம் நீங்கள் வேதத்தை மறந்தீர்கள் தேவன் உங்கள் பிள்ளைகளை மறந்தார்.(ஓசியா 4:6). பிரியமானவர்களே, உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை தேவன் உங்கள் கைகளில் தந்திருக்கிறார். அவர்களை வேத வசனத்தின்படி தேவனுடைய ஆலோசனையின்படி வளருங்கள். பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து@ அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.(நீதி 22:6) உங்கள் பிள்ளைகள் நீங்கள் நடக்கவேண்டிய வழியை நடத்த கர்த்தர் உங்களுக்கும் போதிப்பார். அப்பொழுது உங்கள் பிள்ளைகளும் கர்த்தரால் போதிக்கபடுவார்கள். உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள், உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.(ஏசா 54:13)
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது, ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. (யோசுவா 6:1) எரிகோ இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கானான் தேசத்தை சென்றடையாத படி அது ஒரு தடையாய் இருந்தது. யோசுவாவின் புத்தகம் 6ம் அதிகாரம் 2 முதல் 5 வசனங்களை வாசித்துப்பாருங்கள். இங்கு தேவன் தடையாய் இருந்த எரிகோவை ஜெயிக்கும்படியாய், எரிகோ நிர்மூலமாகி போகும்படியாய் யோசுவாவிற்கு ஆலோசனை கொடுக்கிறார். தேவனுடைய ஆலோசனையின் படி அவர்கள் ஆறு நாட்கள் எரிகோவை தினமும் ஒரு முறை சுற்ற வேண்டும். ஏழாவது நாளில் ஏழு முறை சுற்றிவர வேண்டும். ஏழாம் நாளில் எக்காளத்தின் சத்தம் கேட்கும் போது ஜனங்கள் ஆர்ப்பரிக்க வேண்டும். தேவனுடைய ஆலோசனையின்படி ஜனங்கள் அப்படியே செய்தார்கள். தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவர்களின் சத்துருக்களின் மேல் ஜெயத்தை கொடுத்தார். கர்த்தர் எரிகோவிற்கு செய்ததை கேட்ட சகல ராஜாக்களுக்கும் திகில் பிடிக்கத்தக்கதாய் தேவன் பயங்கரமான காரியங்களை செய்கிறார்.
இன்றைக்கு உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் முன்னேறமுடியாதபடி எரிகோவைபோல தடை செய்யும் சத்துருக்கள் யார்? அவர்களை எப்படி மேற்கொள்ள போகிறீர்கள். இஸ்ரவேல் ஜனங்களை அவர்களுடைய சத்துருக்களுக்கு நீங்களாக்கி விடுதலை கொடுத்தவர் உனக்கு விரோதமாய் தடைசெய்கிற உன்னுடைய சத்துருக்களுக்கு முன்பாக உனக்கு ஜெயத்தை கொடுப்பேன் என்று சொல்லுகிறார். நீங்கள் அவரை ஆர்ப்பரித்து, துதித்து மகிமைபடுத்துங்கள் அப்பொழுது தடைகள் விலகிவிடும். முற்றிலும் நொறுங்கி போகும். உங்களுக்கு விரோதமாய் எழும்பி நிற்க்கிறவர்கள் முன்பாக நீங்கள் சும்மா இருக்கும்போதே கர்த்தர் உங்களுக்காய் யுத்தம் செய்வதை காண்பீர்கள்.
நியாதிபதிகள் 7ம் அதிகாரத்தை வாசித்துப்பாருங்கள். அங்கு மீதியானியரை ஜெயிக்கும்படி தேவன் கிதியோனுக்கு ஆலோசனை கொடுக்கிறார். தேவனுடைய ஆலோசனையின் படி கிதியோன் செய்தபடியினால் அவனுடைய சத்துருக்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவர் எழும்பும்படி தேவன் செய்தார். பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையில் நின்றார்கள்@ அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள். முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார், சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.(நியா 7:21-22)
தேவனுடைய ஆலோசனையின்படி கிதியோன் கேட்காவிட்டால் அவர்கள் யுத்தம் செய்யவேண்டுயது வரும், யுத்தத்தில் அநேகர் மடிந்து போகவேண்டியது வரும். ஆனால் தேவனுடைய ஆலோசனையின்படி கிதியோன் செய்யும் போது. அவர்கள் அவரவர் தங்கள் நிலையில் நின்றார்கள். தேவன் ஜெயத்தை கொடுத்தார். நீங்கள் உங்களுடைய சுயவிருப்பத்தின், உங்களுடைய அறிவு உங்களுக்கு போதிகி;றபடி செய்யாதிருங்கள். அப்படி செய்தால் இழப்புகளை சந்திப்பீர்கள். தேவனுடைய ஆலோசனைக்காக காத்திருங்கள். அவர் உங்களுக்கு போதிக்கிறபடி செய்யுங்கள். அப்பொழுது தேவன் உங்களுக்காய் யுத்தம் செய்வதை காண்பீர்கள். உங்களை பற்றிய திகில் உங்களுடைய சத்துருக்களுக்கு பிடிக்கும்.
வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல் யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி: மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான்.(அப் 27:9-10). அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய கப்பல் பிரயாணத்தின் போது கிரேத்தாதீவிலே தங்கும்படி பரிசுத்த ஆவியினால் உணர்த்தப்பட்டு ஆலோசனை சொன்னார். ஆனால் அவரோடு பிரயாணம் செய்தவர்களும், நூற்றுக்கு அதிபதியும் பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினார்கள். அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தாதீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்;ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள். (அப் 27:12) தேவனுடைய ஆலேசனையை மீறி அவர்கள் செல்லும் போது யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று கப்பலில் மோதிற்று. இதனால் அவர்கள் பல வருத்தங்களை சந்தித்தார்கள், சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள், கப்பலின் தளவாடங்களை கைகளினாலே எடுத்து எறிந்தார்கள். அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போய் காணப்பட்டார்கள்.
இத்தகைய வருத்தத்தை அவர்கள் சந்தித்ததற்கு காரணம,; அவர்கள் தேவனுடைய ஊழியக்காரர் மூலமாய் தேவன் பேசிய ஆலோசனைகளை கேட்கவில்லை. அநேகநாள் அவர்கள் போஜனம் பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது.(அப் 27:21,22). உங்களுடைய வாழ்க்கையில் பல நேரங்களிலே தேவன் உங்களை நடத்தும், உங்கள் ஆத்துமாற்கு உத்திரவாதத்தை கொடுக்கும் தேவனுடைய ஊழியர்களின் மூலம் ஆலோசனைகள் கொடுக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் அவைகளுக்கு உடனே கீழ்படியுங்கள். அப்பொழுது ஆபத்திலிருந்து தப்புவிக்கப்படுவீர்கள்.
பிரியமானவர்களே, இந்த மாதத்தில் தேவன் உங்களுக்கு ஆலோசனை சொல்லி நடத்துவார். அவருடைய ஆலோசனையின்படி செய்யுங்கள். நிச்சயமாகவே நீங்கள் மேலான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வீர்கள். இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.(ஏசா 48:17) நீங்கள் பெற்ற அசீர்வாதங்களை தேவனுடைய நாமம் மகிமைபடம்படி சாட்சியாக எழுதுங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
No comments:
Post a Comment