அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத்
துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். அதற்கு
இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான், கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு
இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ
என்று சொல்ல அது அப்புறம் போம், உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று,
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். - மத்தேயு 17:20
இங்கு இயேசு கிறிஸ்துவிடம் ஒரு மனுஷன், தன் மகனை குணமாக்கும்படி சொல்லுகிறான். அப்படி அவன் சொல்லும் போது தன் மகனை சீஷர்களிடம் கொண்டுவந்தபோது அவர்களால் அவனை குணப்படுத்த முடியவில்லை என்று சொல்லுகிறான். இயேசு கிறிஸ்து பிசாசை அதட்டினார் உடனே அவன் சுகத்தை பெற்றுக்கொண்டான். அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். அவர்கள் பிசாசை துரத்த முடியாமல் போனதற்கு காரணம் அவர்களுடைய அவிசுவாசம் என்று சொல்லுகிறார். அதுமட்டுமல்ல இயேசு கிறிஸ்து இந்த காரியங்களை சொல்லும் போது உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று சொல்லுகிறார். பிரியமானவர்களே உங்களுக்கு விசுவாசம் இருந்தால் உங்களால் கூடாத காரியம் எதுவும் இருக்காது. இதை தான் அப்போஸ்தலர் பவுல் சொல்லுகிறார், என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. இன்றைக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து தேவனிடத்தில் வருகிறீர்கள். உங்கள் பிரச்சனைகள் மாறவேண்டும், உங்களை மேற்கொள்ள பாவம் வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று பரிசுத்தமாய் வாழவேண்டும், கடன் பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும் இப்படி எத்தனையோ காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் நிறைவேற வேண்டும். இதை தேவன் உங்களுக்கு செய்ய நீங்கள் விசுவாசத்தோடு இருக்கவேண்டும் என்று சொன்னால் நீங்கள் நான் விசுவாசிக்கிறேன் என்று சொல்லுவீர்கள். ஆம் நான் விசுவாசிக்கிறேன் என்று சொன்னால் மட்டும் உங்கள் வாழ்க்கை மாறாது. இயேசு கிறிஸ்து இங்கு விசுவாசத்தை குறித்து சொல்லும்போது “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்” என்று சொல்லுகிறார். அப்படியானால் விசுhசம் என்பது நாம் நம் வாயை திறந்து தேவன் இங்கு சொல்லுவது போல் பேச வேண்டும். உங்களித்தில் விசுவாசம் இருக்கிறது என்பது உண்மைதான், அனால் அந்த விசுவாசம் நீங்கள் பேசும் போதும், அறிக்கை செய்யும் போதும் உயிர் உள்ளதாய் செயல்படுகிறது.
ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று.(கலா 3:14) ஆபிரகாமின்
ஆசீர்வாதங்கள் அனைத்தும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதங்கள், இவைகளை விசுவாசத்தினால் மட்டுமே நாம் பெற்றுக்கொள்ள முடியும். ஆபிரகாம் தேவனிடத்திலிருந்து இந்த ஆசீர்வாதங்களையெல்லாம் விசுவாசத்தினாலே பெற்றுக்கொண்டான். தேவன் வாக்குத்தத்தம் செய்த நாள் துவங்கி அவைகளை பெற்றுக்கொண்டதாக தன் வாயினால் அறிக்கை செய்தான். தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனைமகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.(ரோமர் 4:21) ஒவ்வொரு முறையும் அவன் வாக்குத்தத்தத்தை நம்பி அறிக்கை செய்து, தேவனை மகிமைபடுத்தும் போது அவன் வசுவாசம் வளர்ந்து கொண்டே போனது. நீங்கள் பேசும் வார்த்தைகளே உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. தேவனை விசுவாசிக்கிறேன் அவர் என் வாழ்க்கையில் அற்புதங்களை செய்வார் என்று நீங்கள் சொல்லிவிட்டு, சில மணி நேரங்களில் தேவனை விசுவாசிக்கிறேன் என்று சொன்ன அதே வாயினால் மீண்டும் உங்கள் பிரச்சனைகளை குறித்தே புலம்புகிறீர்கள். தேவனை விசுவாசிக்கும் நீங்கள் உங்கள் இருதங்களை விசுவாசமான வார்த்தைகளினால் நிறப்புங்கள். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.(மத்தேயு 12:35) தேவனை விசுவாசிக்கும் நீங்கள் உங்கள் இருதயங்களில் விசுவாசமான வார்த்தைகளை எடுத்து பேசுவீர்கள், இந்த விசுவாசமான வார்த்தைகளை நீங்கள் பேசும் போது, உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சமாதானத்தை பெறுவீர்கள். நீங்கள் எதை குறித்தும் கவலைபடவே மாட்டீர்கள். இன்று உங்களுடன் தேவன் பேசும் வார்த்தை விசுவாசிக்கிற உங்களால்; கூடாத காரியம் ஒன்றுமிராது.
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். – மாற்கு 9:23

No comments:
Post a Comment