நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள், இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். - சகரியா 9:12
இன்றைக்கு தேவன் உங்களை இரட்டிப்பாக ஆசீர்வதிக்க சித்தம் கொண்டுள்ளார். உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும், இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள், அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும்.(ஏசா 61:7) அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.( ஆதி 32:10). யாக்கோபுக்கு தேவன் இரண்டு பரிவாரங்களினால் ஆசீர்வதித்தார். இரட்டிப்பான நன்மையை தருகிறேன் என்று சொல்லுகிற தேவன் உங்களையும் இரண்டு பரிவாரங்களினால ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார். யாக்கோபு தன் குடும்பத்தை விட்டு தனிமையிலே விடப்பட்டவனாய் தன் மாமனாகிய லாபானின் வீட்டிற்கு செல்லும் போது வழியிலே அவனை தேவன் சொப்பனத்தின் மூலம் சந்தித்தார். தேவன் சந்தித்த அந்த இடத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான். யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார், இதை நான் அறியாதிருந்தேன் என்றான். அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான், அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. (ஆதி 28:16-19). அப்பொழுது யாக்கோபு தேவ சமுகத்தில் பொருத்தனை செய்தான். அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார், நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும், தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனை பண்ணிக்கொண்டான்.(ஆதி 28:20-22).
யாக்கோபு தேவனோடு பொருத்தனை செய்து உடன்படிக்கை செய்தபடி தேவன் அவனை ஆசீர்வதித்தார். பிரியமானவர்களே! யாக்கோபை போல நீங்களும் பல வேளைகளிலே தேவ சமுகத்தில் பொருத்தனை செய்கிறீர்கள். நீங்கள் தேவ சமுகத்தில் ஜெபிக்கும் நேரத்தை கூட்டுவதாக பொருத்தனை செய்கிறீர்கள். தேவனுடைய ஊழியங்களை செய்வதாக பொருத்தனை செய்கிறீர்கள். தேவன் உங்கள் தொழிலை ஆசீர்வதித்தால் சில குறிப்பிட்ட பகுதியை ஊழியத்திற்கு கொடுப்பதாக பொருத்தனை செய்கிறீர்கள். இப்படி பொருத்தனை செய்யும் நீங்கள் அவைகளை நிறைவேற்றினீர்களா? தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்க்ள பொருத்தனை செய்வதிலும் அவைகளை நிறைவேற்றுவதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.(நீதி 20:25). நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே, அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை, நீ நேர்ந்துகொண்டதைச் செய்.(பிர 5:4). யாக்கோபின் வாழ்க்கையில் தேவன் அவனை சந்தித்து அவனை நினைப்பூட்டினார். அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார், இதோ, இருக்கிறேன் என்றேன். அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார், ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது, லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.(ஆதி 31:11-13). தேவனுடைய வார்த்தையின் படி அவன் பொருத்தனையைப் பண்ணின பெத்தேலுக்கு கடந்து சென்றான். உங்களுடை வாழ்க்கையிலும் தேவன் நீங்கள் செய்த பொருத்தனைகளையும், உடன்படிக்கையையும் நினைப்பூட்டுகிறார். உங்களுடைய பொருத்தனைகளை இன்றே நிறைவேற்றுங்கள் அப்பொழுது யாக்கோபைபோல இரண்டு பரிவாரங்களுடைய ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். – 1தீமோத்தேயு 5:17

No comments:
Post a Comment