Monday, 9 February 2015

நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். – தானியேல் 3:17.

நீங்கள் ஆராதிக்கும் தேவன் வல்லவர் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?  தங்கள் தேவன் வல்லவர் என்பதை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர் அறிந்திருக்கிறார்கள்.  தங்கள் தேவன் வல்லவர் என்பதை அவர்கள் அறிந்திருந்தபடியினால் அவர்கள் நேபுகாத்நேச்சாருக்கு பயப்படவில்லை. நேபுகாத்நேச்சரைப்பார்கிலும் தாங்கள் ஆராதிக்கும் தேவன் வல்லவர் என்பதை அறிந்திருந்தார்கள். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.   நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். (தானி 3:16-17).  நீங்கள் ஆராதிக்கும் தேவன் வல்லவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தீர்களானால் கர்த்தருடைய வல்லமை உங்கள் வாழ்க்கையில் வெளிப்படும்.  தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் ப+மியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது, இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர், ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான். (2நாளா 16:9).  பிரியமானவர்களே, தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.  அவர் வல்லவர். இன்றைக்கு உனக்கு முன்பாக எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் உன் தேவனாகிய கர்த்தர் அதைவிடப்பெரியவராய் அதை தீர்த்துவைக்க வல்லவர். தேவன் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்ற வல்லவர் என்பதை ஆபிரகாம் அறிந்திருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல்,   தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனைமகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். (ரோமர் 4:20-21). பிள்ளையற்ற ஆபிரகாமுக்கு நூறு வயதில் குழந்தை உண்டாக்க வல்லமையுள்ள தேவன் உனக்கு குழந்தையை கொடுத்து ஆசீர்வதிக்க வல்லவர்.  அவர் சர்வவல்லமையுள்ள தேவன் என்பதை உனக்கு வெளிப்படுத்துவார்.  ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசினமாகி, நான் சர்வவல்லமையுள்ள தேவன். நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு.   நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். (ஆதி 17:1-2).   

ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். (எபி 2:18).  தேவன் சோதிக்கப்படுகிற உனக்கு உதவி செய்ய வல்லவர்.  உங்களுடைய வாழ்கையில் சோதனைகளை நீங்கள் சந்திக்கும் போது அதை எப்படி மேற்கொள்வது என்றும், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்கதை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.  உங்கள் வாழ்க்கையில் சோதனையின் நாட்களில் நீங்கள் மிகவும் நெருக்கப்படும் போது என்ன செய்வது என்று அறியாத நேரங்களில் தேவ சமுகத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஆலோசனைக்கு காத்திருங்கள்.  அவர் உங்களை தப்புவிக்க வல்லவர்.  மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்@ உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். (1கொரி 10:13).  சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அவர்களின் வாழ்கையில் அவர்களை தப்புவிக்க வல்லவராய் அவர்களோடு அக்கினி சூளையில் நடந்தார்.  சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான். அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை. நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். (தானி 3:23-25).

நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,   சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். – எபேசியர் 3:20-21.

No comments:

Post a Comment