Thursday, 5 February 2015

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். – சஙகீதம்; 118:24

இந்த நாள் கர்த்தர் உண்டுபண்ணின நாள் என்று தாவீது சொல்லுகிறார்.  அப்படியானால் இந்த நாள் முழுவதும் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும், இன்று நீங்கள் கையிட்டு செய்யும் அனைத்து காரியத்தையும் தேவன் ஆசீர்வாதமாய் மாற்றுவார், இன்று நீங்கள் எல்லா காரியத்திலும் ஜெயத்தை காண்பீர்கள்.  இவையெல்லாம் நடக்குமா?  நிச்சயமாய் நடக்கும் ஏனென்றால் இந்த நாள் கர்த்தர் உண்டுபண்ணின நாள்.  எல்லா நாளையும் தேவனே உண்டாக்கினார்.  சிருஷ்டிப்பின் நாட்களில் தேவன் ஒவ்வொரு நாளையும் உண்டுபண்ணி, இவ்வுலகத்தின் காரியங்களை சிருஷ்டித்து அவைகளை ஆசீர்வதித்து அவைகள் அனைத்தும் நல்லது என்று சொன்னார். ஒவ்வொரு நாளும் நீங்கள் தேவனுடைய அற்புதங்களை காணவேண்டும் என்பதற்காக தேவன் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார்.  களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே@ நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.(ஆகாய் 2:19)   தேவனுடைய பார்வையில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள்.  எனவே தாவீது ஒவ்வொரு நாளும் இது கர்த்தர் உண்டுபண்ணின நாள் என்று சொல்லி துதிக்கிறார்.  தாவீதைப்போல நீங்களும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தேவனே இந்த நாள் நீர் உண்டுபண்ணின நாள் இந்த நல்ல நாளுக்காய் உம்மை துதிக்கிறேன் என்று துதித்து பாருங்கள.; அந்த நாள் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்பதை காண்பீர்கள்.  ஏன் நீங்கள் ஒவ்வொரு நாளும் தேவனை துதிக்க வேண்டும்?  ஓவ்வொரு நாளும் கர்த்தர் உன்னோடு இருந்து உங்களை வழிநடத்துகிறபடியினால் நீங்கள் அவரை துதிக்க வேண்டும்.  அவர் உங்களை விட்டு விலகுவதில்லை என்று வாக்குகொடுத்திருக்கிறார்.  நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை@ நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்@ நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.(யோசுவா 1:5).  மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.(ஏசா 54:10).  இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.(மத் 28:20).

தேவன் இந்த நாளை உண்டு பண்ணினபடியினால் உன்னுடைய வாழ்க்கையில் நேரிடும் காரியங்கள் அனைத்தும் உன்னுடைய ஆசீர்வாதங்களுக்காகவே இருக்கும்.  உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும் போது அதை நன்மையான நாளாக கருதுகிறீர்கள்.  ஆனால் தீமைகளையும் போராட்டங்களையும் சந்திக்கும் போது நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?  அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த்தேவனிடத்
தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.(ரோமர் 8:28).  பிரியமானவர்களே! உங்கள் வாழ்க்கையில் சில நாட்களில் தீமைகளையும் போராட்டங்களையும் சந்திக்கும் போது அவைகள் உங்களுடைய நன்மைக்காக என்று இரகசியத்தை அறிந்து தேவனை துதியுங்கள்.  பவுலும், சீலாவும் தேவனுடைய சுவிசேஷத்தை அறிவித்ததின் நிமித்தம் கலகம் பண்ணினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள்.  சிறைச்சலைக்கு செல்வதினால் அவர்கள் சோர்ந்து போகவில்லை, அந்த நாளைக்குறித்து அவர்கள் முறுமுறுத்து குற்றம் சொல்லவில்லை.  அவர்கள் சிறைச்சலையில் அடைக்கப்பட்டபோதிலும் தேவனை துதித்து பாடி மகிழ்ந்தார்கள்.  நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்@ காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.(அப் 16:25).  அவர்கள் தேவனை துதித்து பாடின போது உடனே அற்புதம் நடந்தது.  சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன, புட்டப்பட்ட கதவுகள் திறந்தன.  சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது@ உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது@ எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.(அப் 16:26).  அந்த நாளிலே சிறைச்சலைக்காரனும் அவனுடைய குடும்பத்தினரும் இரட்சிக்கப்பட்டார்கள், பவுலும் சீலாவும் விடுவிக்கப்பட்டார்கள்.  யோபுவின் வாழ்க்கையை பாருங்கள் எல்லாவற்றையும் இழந்த போதிலும் அந்த நாளை குறித்து குற்றம் சொல்லாமல் தேவனை துதித்தான்.  நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்@ நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்@ கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்@ கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.   இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.(யோபு 1:21-22).  தேவனுடைய வார்த்தை நமக்கு கற்றுக்கொடுப்பதெல்லாம்  தீமைகளையும் போராட்டங்களையும் நாம் சந்திக்கும் போது அந்த நாளை குறித்து நாம் குற்றம் சொல்லாமல் தேவனை துதித்து மகிமைபடுத்தவேண்டும். 

கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். – சங்கீதம் 34:1 

No comments:

Post a Comment